காதல் காயம்

எழுத்து தள நண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் தமிழ்ப்ரியாவின் புதிய முயற்சி,
'காதல் தேசம்' திரைப்படத்தில் இடம் பெற்ற "தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு" என்ற பாடலின் இசையை தழுவி எழுதிய வரிகள் இப்பதிவில் சமர்பித்திருக்கிறேன். இரண்டாம் சரணத்தின் மெட்டிலேயே முதல் சரணமும் எழுதி இருக்கிறேன், படிப்பவர்கள் குழம்ப வேண்டாம்....
இதை எழுதுவதற்கு சகோதரர் ஒருவர் வெகு நாட்களுக்கு முன்பு தந்த படைப்பு தான் உந்துதலே. கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தின் பாடலுக்கு அவரது வரிகளைச் சேர்த்திருந்தார். மிக அருமையாக இருந்தது. நிறையப் பாடல்களில் வரிகள் தெரியாது, மனதில் தோன்றியதை எல்லாம் சம்பத்தப்பட்டப் பாடலில் பாடிப்பார்த்திருக்கிறேன், சகோதரர் எழுத்தில் பகிர்ந்ததை படித்ததில் இருந்து எனக்குள் ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. எழுதும் வாய்ப்பு கிடைத்தது எழுதிவிட்டேன்.
உளமார்ந்த நன்றி சகோதரர் திரு. ஷர்பான் அவர்களுக்கு...

அனைவரது கருத்தினை எதிர்பார்த்து காத்திருப்பேன்...
வரிகளில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டுங்கள்...


நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே
ஓர் உடல் கலந்த என் உயிரே
நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே
ஓர் உடல் கலந்த என் உயிரே
பகலை மறந்து இருளில் கலந்திட
வலியை மறந்தே தூங்கு
வழிகள் வலித்திடும் உணர்வை உருக்கிடும்
கனவை மறந்தே தூங்கு...
நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே ஓர் உடல் கலந்த என் உயிரே...

காலை வானின் கதிரவன் அவன்
கடல் போலே விரிகிறான்
மாலை வேளையில் நோயைப் போலே
இதயம் தன்னில் இறங்கினான்
காதல் காயம் என் உயிர்க்குத் தெரியும்
இதய ஓலம் புரியுமா
துடிக்கும் கண்களில் காட்சித் தெரியும்
என் கண்ணீர்தான் தெரியுமா
விழிகள் விழித்தும் உறங்கினேன்
அவன் உருவம் கண்டே எழுகிறேன்...

நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே
ஓர் உடல் கலந்த என் உயிரே
நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே
ஓர் உடல் கலந்த என் உயிரே
பகலை மறந்து இருளில் கலந்திட
வலியை மறந்தே தூங்கு
வழிகள் வலித்திடும் உணர்வை உருக்கிடும்
கனவை மறந்தே தூங்கு....

கவியின் வரிகளின் நடையைப் போலே
இதய வரிகளில் நில்லடா,
வெரிக்கும் மானின் விழிகள் போலே
நினைவில் சற்றே துல்லடா,
பூக்கும் பூக்களின் வாசம் தெரியும்
வாடும் வேதனைத் தெரியுமா
வீழும் காதல் உணர்வைக் கொள்ளும்
அதில் உயிரும் சரிவதுத் தெரியுமா
சுவாசம் இன்றி வாழ்கிறேன்
உன் வாசம் தேடி தேய்கிறேன்....

நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே
ஓர் உடல் கலந்த என் உயிரே
நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே
ஓர் உடல் கலந்த என் உயிரே
பகலை மறந்து இருளில் கலந்திட
வலியை மறந்தே தூங்கு
வழிகள் வலித்திடும் உணர்வை உருக்கிடும்
கனவை மறந்தே தூங்கு...
நெஞ்சிலே நெஞ்சிலே உறங்கும் என் உயிரே ஓர் உடல் கலந்த என் உயிரே....

எழுதியவர் : தமிழ் ப்ரியா (1-Feb-18, 6:08 pm)
Tanglish : kaadhal KAAYAM
பார்வை : 208

சிறந்த கவிதைகள்

மேலே