நம் காதல்

கண்ணே கற்கண்டே!
உண்மைக் காதலர்கள்
இருக்குமிடம் தெரியாது.

நாமோ போலிக் காதல் ஜோடி
கண்ட இடத்தில் எல்லாம்
காண்பவர் காறித்துப்ப
சில்மிஷம் செய்வோம்.

எல்லாவற்றையும் துடைத்தெறிந்த
நமக்கு எத்தனைபேர் துப்பினாலும்
இடையூறு அது ஆகாது.

மூன்று வேளை உணவோடு
அடிக்கடி நொறுக்குத் தீனி
இதுபோல் தான் நம் காதல்.

நமக்கு காதலர் தினம்
நாள்தோறும் உண்டு
பொது இடம் சந்து பொந்து
எல்லா இடமும் நம்
காதல் சாம்ராச்சியத்தில் அடக்கம்.

வா, வா என் தங்கமே,
உனக்கும் எனக்கும்
பிடிக்கும் வரைக்கும்
காதலராய் சுற்றித் திரிவோம்
கண்டவர் நாணி நம்மைக்
காறித் துப்பட்டும்!

உண்மைக் காதலர்கள்
திருந்தட்டும் நமைப்பார்த்து
மேலைநாட்டுக் காதல் நம் காதல்
சங்க காலக் காதலுக்கு
சங்கு ஊதுவோம் வா, வா.

எழுதியவர் : மலர் (13-Feb-19, 11:34 pm)
Tanglish : nam kaadhal
பார்வை : 159

மேலே