எப்படி மறப்பது

உன்னோடு நான்
நடந்து வந்த பாதை

உன்னை ஞாபகப்படுத்தும்
என் சிரிப்பு

என்னுள் கேட்கும்
உன் இதய துடிப்பு

தூங்காமல் தொடரும்
உன் நினைவுகள்

உன்னை பற்றி சொல்லும்
என் வாழ்க்கை

நம் கதை பேசும்
இந்த ஊர் மக்கள்

இப்படி சகலமும் நீயாயிருக்கும்போது
எப்படி மறப்பது...?

எழுதியவர் : மீனா (7-Mar-18, 10:15 am)
சேர்த்தது : மீனா
Tanglish : yeppati marappathu
பார்வை : 384

மேலே