காதல் பொழுது
விடியும் பொழுதில்
பூக்களின் மீது படர்ந்த
பனித்துளிகளின்
ஆழ்ந்த உறக்கம்
உன் மௌனம்
சுட்டெரிக்கும் வெய்யிலில்
கடற்கரை ஈரக்காற்று வீசி
என் முகத்தின் வியர்வை
துளிகளுக்கு விடுதலை
கொடுத்தது உன் முகதரிசனம்
மழலை மொட்டுக்கள்
மகிழ்ந்து விளையாடும்
அந்தி மாலைப்பொழுதில்
மஞ்சள் வெய்யிலின்
ஸ்பரிசம் உன் புன்னகை
இரவின் போர்வையில்
ஆம்பலின் வாசத்தில்
லயித்து தன்னைமறந்து அதை
விளக்கென முட்டி மோதும்
விட்டில் பூச்சியின்
நிலையில் நான்
உன்னோடு பேசியப்போது.