அவசரம்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்திட
பக்குவமாய் வரவேற்ற முதல் பந்தி
பசித்த வயிற்றிக்கு படையல் பரிசளிப்பு

பல பேர் இருக்கையிலா பதற்றம் தவிர்க்க
சட்டென எழுந்திட
கல்யாண விருந்தின் பரிமாறுதலில்
பாயாசமும் பஞ்சு வடையும் தப்பித்துவிட்டது !

மொய் எழுதிய முடி துறந்த எழுதுகோள்
சட்டைப் பையில் கண்ணீர் சிந்திட
கதர் ஆடை கரைகண்டு கணக்கிறது !
தெருவழி கண்கள் மீண்டும் மீண்டும் பார்த்திட...

என்னையா மோட்டார் சைக்கிள் சவாரி
தலைக்கவசம் எங்கே போனது ?
எழுதுகோள் மூடி சீண்டுதே சட்டைப் பையை
என்ன போதாத காலம் உமக்கு ..... இன்று
என பார்ப்போர் வினவிட...
விடை கிடைத்தது !

கடித உறைக்குள் மொய் காசு
தவறாமல் மறவாமல் வைக்க மறந்த
முதல் தவறு என மனதை உலுக்கியது .
மீண்டும் ஓட்டம் மொய் உறையை மீட்டெடுக்க !

எழுதியவர் : மு.தருமராஜு (5-Jan-25, 2:50 pm)
Tanglish : AVASARAM
பார்வை : 14

மேலே