அரைமேனி ஆடை

ஆள் பாதி ஆடை பாதி இது பழமொழி
ஆடையே பாதி ஆனதோ முதுமொழியாக்க
ஆடவர் கண்கள் ஆடையிலில்லை எனும் பெண்டிர்
உங்கள் அங்கங்களில் இல்லை எங்கள் கண்கள்
உங்கள் அண்ணன் என்ற உணர்வில் உள்ளது எங்கள் எண்ணங்கள்
வெறுமேனி மூடிட கண்டோம் நாகரீகம்
அந்நாகரீகம் அரைமேனி ஆடையில் அநாகரிகம் ஆனதோ
உடல் மறைக்க அணிவோம் ஆடை
ஆடை வைத்துதான் எடைபோடுகிறது சமுதாயம்
எங்கள் வீட்டு பிள்ளைகள் நீங்கள் உங்கள் வளர்ச்சியில் எங்கள் பங்கும் உண்டு
உடல் போர்த்தி வாருங்கள் என்று சொல்லவில்லை
குடும்பத்தின் மானத்தை பறக்க விடாதீர் என்றே சொல்கிறோம்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (7-Mar-18, 10:52 am)
சேர்த்தது : davidsree
பார்வை : 98

மேலே