காதல்
தேவலோகத்தில் ரம்பை
ஊர்வசி திலோத்தமை
என்ற அழகு தேவதைகள்
இருந்த போதிலும் இந்திரன் ஆதி
முக்கிய தேவதைகள்
மண்ணுலகு அழகு மங்கையரை
மணம்புரிய எண்ணியதேன் என்று
இன்று புரிந்ததடி பெண்ணே
உன்னை பார்த்தபின்னே
உந்தன் மோகன புன்னகைத் தவழும்
சந்திர வதனம் பார்த்தபின்னே
காதல் காவியம் பேசும் உந்தன்
கள்ளூறும் கண்கள் இரண்டும்
கண்ட பின்னே
உந்தன் காமத்தேன் கசியும்
இதழ்கள் இரண்டும் கண்ட பின்னே
உந்தன் பார்வை ஒன்றிலேயே
மயங்கி கிடைக்கும் நான்
நீ வாய் திறந்து பேசும் காதல்
மொழி என்னமொழியோ என்று
கேட்க காத்திருக்க ''''''''''''' காதில்
வந்து கேட்டது நீ தமிழில்
'காதல்' என்று மெல்ல கூறிய
இனிய மொழி