கட்டளையிடு

கண் எட்டும்தூரம் நானிருப்பேன்
உன் செயல்களை கண்டுரசிப்பேன்
உறங்காது தினமும் காவலிருப்பேன்
உனக்காக எப்பொழுதும் காத்திருப்பேன்
காலத்தால் உன்னை தேர்வுசெய்யவில்லை
காதலிக்க உன்னைப்போல் யாருமில்லை
சாதிமதம் எனக்கு தடையில்லை
நீமட்டும்போதும் காசுபணம் நிரந்தரமில்லை
குலதெய்வமாக உன்னை தரிசிக்க
உன்னோடுசேர்ந்து நானும் மணமணக்க
இல்லற வாழ்க்கையை சிறப்பிக்க
முடிவுசெய் நீ என்னைமணம்முடிக்க
தனிமை என்பது பாலாங்கிணறு
விழுந்தால் பறிபோகுமடி என்உயிரு
வாழாவெட்டியாக என்னை மாற்றாதே
பிரிவால் என்னை வாட்டிவதைக்காதே
சிந்தித்து செயல்படு
நல்லதொரு முடிவைஎடு
அச்சங்களை விரட்டிவிடு
தாலிகட்ட எனக்கு கட்டளையிடு !...