ஒரு பொய்சொல்லிதானே காதலிச்சேன்❤❤❤
ஒரு பொய்சொல்லிதானே காதலிச்சேன்
உன்ன பொண்டாட்டியாக்க நினச்சதால
இப்படி பொசுக்குன்னு என்னை வெறுக்குறியே
போடாநீ பிராடுனு தொரத்துறியே
வாடிஎன் அம்மு செல்லக்குட்டி
கெட்ட வார்த்தையால போகுறியே என்னைத் திட்டி
வாடிஎன் சீனி சக்கரையே
கொஞ்சம்கூட இல்ல என்மேல் அக்கறையே
(ஒருபொய் சொல்லித்தானே)
ஆசை வார்த்தை சொல்லியுன்ன ஏமாத்தலயே
அங்க இங்க தொட்டிடத்தான் நினைக்கலையே
ஒருபொய்யை தவிர வேறெதுவும் சொல்லலையே
பொழுதுபோக்கு காதல் செய்ய மனம் விரும்பலையே
என்காதல் உண்மைதானே புரிஞ்சுக்கடி
எனக்குள்ள நீமட்டும்தான் இருக்குறடி
வாழ்க்கை முழுதும் உன்கூட இருப்பேனடி
என்வாக்கு தவறிப்போனா உடனே இறப்பேனடி....
(ஒருபொய் சொல்லித்தானே)