சிவந்த உன் முகம்

சப்தமில்லாமல்
பலமுறை உச்சரித்த
உன் பெயர்..
என்னை
காயப்படுத்திய
உன் சொற்களில்
மயங்கிய என் இதயம்...
நான் இரசித்த
என்னை வெறுத்த
உன் கண்கள்...
உன்னை தேடிய
என் விழிகளை
பார்த்து உயர்த்திய
உன் புருவம்...
நான் உன்னை
நேசிக்க மறத்த
போதும் என்னை
வெறுக்க மறக்காத
உன் மனது....
என் காதலால்
கோபத்தில் அழகாய்
சிவந்த உன் முகம்..
என் மனதில்
தடுமாற்றத்தில் தொடங்கி
ஏமாற்றமாய் போன
என் காதல்...