தங்க பாண்டியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தங்க பாண்டியன் |
இடம் | : சிவகங்கை சீமை |
பிறந்த தேதி | : 01-Dec-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 754 |
புள்ளி | : 61 |
கடவுளைத் தேடி அலைஞ்சேனே
கால்கடுக்க நான் நடந்தேனே
கரு சுமந்தவ இங்கிருக்க
காசி இராமேஸ்வரம் போனேனே...
அன்னைய மிஞ்சிய தெய்வமில்லடா
அதை மறுத்திடும் யாரும் மனுசன் இல்லடா
பத்து மாசம் சுமந்துன்னை பெத்திடுவா
உன்ன பாத்தவுடனே பட்ட கஷ்டம் மறந்திடுவா
நிறமென்ன இனமென்ன பாக்கமாட்டா
நீ அழுவாய் என்று அவ தூங்கமாட்டா...
தாலாட்டு பாடி உன்ன தூங்க வைப்பா
தவறென்ன செஞ்சாலும் அத தடுக்கமாட்டா
அம்மானு கூப்பிட்டதும் வந்து அனைச்சுடுவா
ஆசைதீர முத்தமழை பொழிஞ்சுடுவா...
தாயைப் போல உறவு உலகில் இல்லையே
அத தைரியமா சொல்லிடுவேன் தயக்கம் இல்லையே...
ஒரு பொய்சொல்லிதானே காதலிச்சேன்
உன்ன பொண்டாட்டியாக்க நினச்சதால
இப்படி பொசுக்குன்னு என்னை வெறுக்குறியே
போடாநீ பிராடுனு தொரத்துறியே
வாடிஎன் அம்மு செல்லக்குட்டி
கெட்ட வார்த்தையால போகுறியே என்னைத் திட்டி
வாடிஎன் சீனி சக்கரையே
கொஞ்சம்கூட இல்ல என்மேல் அக்கறையே
(ஒருபொய் சொல்லித்தானே)
ஆசை வார்த்தை சொல்லியுன்ன ஏமாத்தலயே
அங்க இங்க தொட்டிடத்தான் நினைக்கலையே
ஒருபொய்யை தவிர வேறெதுவும் சொல்லலையே
பொழுதுபோக்கு காதல் செய்ய மனம் விரும்பலையே
என்காதல் உண்மைதானே புரிஞ்சுக்கடி
எனக்குள்ள நீமட்டும்தான் இருக்குறடி
வாழ்க்கை முழுதும் உன்கூட இருப்பேனடி
என்வாக்கு தவறிப்போனா உடனே இ
பஞ்சத்துல மனித கூட்டம்
பாதி உயிரு போயிருச்சே
மிச்சம் இருந்த உயிரெல்லாம்
ஊரை விட்டு போயிருச்சே...
பாவப்பட்ட பூமியாகி
பல வருடம் ஆகுதடா
பார்க்கும் இடம் எல்லாமே
வறட்சி ஆட்சி செய்யுதடா...
இருந்தும் கொஞ்ச விவசாயி
இன்னும் இங்கே வாழ்கிறானே
நல்ல நாளை எதிர்பார்த்து
நம்பிக்கையாய் இருந்தானே...
திடீரென்று காற்று வீச
திரண்ட மேகம் மழை தூற
காத்திருந்த மக்கள் கூட்டம்
கண் குளிர்ந்து போனதிங்கே...
வண்டல் மண்ணு நிலமெல்லாம்
வயிறாற நீர் குடிக்க
காய்ந்து போன கரிசல் மண்ணில்
கனமழையும் பெய்தது இங்கே...
ஏர் பிடித்து உழுவதற்கு
ஏற்ற நேரம் வந்தாச்சே
ஊரோடு ஒன்று கூடி
உழைக்கத் தொடங்கி நாளாச்சே...
வ
பஞ்சத்துல மனித கூட்டம்
பாதி உயிரு போயிருச்சே
மிச்சம் இருந்த உயிரெல்லாம்
ஊரை விட்டு போயிருச்சே...
பாவப்பட்ட பூமியாகி
பல வருடம் ஆகுதடா
பார்க்கும் இடம் எல்லாமே
வறட்சி ஆட்சி செய்யுதடா...
இருந்தும் கொஞ்ச விவசாயி
இன்னும் இங்கே வாழ்கிறானே
நல்ல நாளை எதிர்பார்த்து
நம்பிக்கையாய் இருந்தானே...
திடீரென்று காற்று வீச
திரண்ட மேகம் மழை தூற
காத்திருந்த மக்கள் கூட்டம்
கண் குளிர்ந்து போனதிங்கே...
வண்டல் மண்ணு நிலமெல்லாம்
வயிறாற நீர் குடிக்க
காய்ந்து போன கரிசல் மண்ணில்
கனமழையும் பெய்தது இங்கே...
ஏர் பிடித்து உழுவதற்கு
ஏற்ற நேரம் வந்தாச்சே
ஊரோடு ஒன்று கூடி
உழைக்கத் தொடங்கி நாளாச்சே...
வ
கடவுளைத் தேடி அலைஞ்சேனே
கால்கடுக்க நான் நடந்தேனே
கரு சுமந்தவ இங்கிருக்க
காசி இராமேஸ்வரம் போனேனே...
அன்னைய மிஞ்சிய தெய்வமில்லடா
அதை மறுத்திடும் யாரும் மனுசன் இல்லடா
பத்து மாசம் சுமந்துன்னை பெத்திடுவா
உன்ன பாத்தவுடனே பட்ட கஷ்டம் மறந்திடுவா
நிறமென்ன இனமென்ன பாக்கமாட்டா
நீ அழுவாய் என்று அவ தூங்கமாட்டா...
தாலாட்டு பாடி உன்ன தூங்க வைப்பா
தவறென்ன செஞ்சாலும் அத தடுக்கமாட்டா
அம்மானு கூப்பிட்டதும் வந்து அனைச்சுடுவா
ஆசைதீர முத்தமழை பொழிஞ்சுடுவா...
தாயைப் போல உறவு உலகில் இல்லையே
அத தைரியமா சொல்லிடுவேன் தயக்கம் இல்லையே...
என்னவனுக்காக
எதிர்பாத்து காத்திருந்த
எந்தன் ஏக்கங்களை
எடுத்து சொல்வது
முதலில் உன்னிடம்தானே
காதலன் என்னை
கடந்த சென்றதும்
பார்க்காமல் போய்விட்டானென
நான் பதறிய அந்த நிமிடங்களை
பகிர்ந்து கொண்டது உன்னிடம் மட்டுமே...
ஒவ்வொரு முறையும்
அவனுக்காக காத்திருந்த என்னிதயத்தை
உன் இரும்பு கம்பிகளின் இடைவெளிக்குள் அனுப்பிவைத்த நினைவுளை
இன்னும் மறக்க முடியவில்லையே..
துணையாக வரவேண்டியவன்
தூரமாக சென்று விட்டானென
நான் துயரப்படுவதைப் பார்த்து
துருபிடித்துவிட்டதோ
உன் இரும்பி கம்பிகளும்
அழுதழுதே....
காதலன் பிரிந்து சென்றபோது
கடந்து வந்த வலியை விட
உனைக் காணும்போதுதான்
கண்ணீர் வடித
சேலைகட்டி
பஞ்சுமிட்டாய் சேலைகட்டி நடந்து போகும் கண்ணம்மா
ஒரு சேதி சொல்லனும் சேந்து போவோம் நில்லம்மா.....
அப்படி இப்படி முறைச்சு பாக்குற கோபமா
ஆசையிருந்தும்
என்மேல ஆசையிருந்தும் நடிக்கிறியே ஏனம்மா...!!!
என்ன வேணும் சொல்லடி
என் உசுரகூட கேளுடி
கோபம் எதுக்கு வேணான்டி
கொஞ்சி பேசலாம் வாயேண்டி
சேலைகட்டி
பஞ்சுமிட்டாய் சேலைகட்டி நடந்து போகும் கண்ணம்மா
ஒரு சேதி சொல்லனும் சேந்து போவோம் நில்லம்மா
மார்கழி மாச குளிருல
மல்லாக்க படுத்தும் தூங்கலை
ராத்திரி முழுதும் உன் நெனப்புல
சூடான என்உடம்பு ஆறல...
சேலைகட்டி
பஞ்சுமிட்டாய் சேலைகட்டி நடந்து போகும் கண்ணம்மா
ஒரு சேதி சொல்லனும் சேந்து
இப்ப மாறிப் போச்சு உலகமே
இங்கே மனிதன் கூட மிருகமே
நரி வேடம் போட்டு நடக்கிறான்
நல்லவன் போல் நடிக்கிறான்
ஐந்து அறிவு உயிர்கள் கூட
அமைதியாக வாழுதே
ஆறறிவு கொண்டவனோ
அடித்துக் கொண்டே சாகிறானே
தனக்கு மட்டும் என்று ஏனோ
சுயநலம் கொண்டு சுத்துறானே
தந்திரமாய் ஏமாற்றி
தன்குடும்பம் காக்கிறானே
பணத்தின் மீது ஆசை கொண்டு
பைத்தியமாய் திரிகிறானே
பாவங்கள் நிறைய செய்தும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறானே
எல்லாம் நவீனமாகிப் போச்சு
இந்த எந்திர உலகத்திலே
இருந்தும் மனிதன் வாழ்கிறானே
இன்னும் தந்திர நோக்கத்திலே...
என் அழகு அழகுத் தேவதையே
உன்னருகே அருகே நான் வருகையிலே
ஆழ்மனம் உன்னைக் கண்டு துடிக்குதடி
அவசரமாய் ஏதோ சொல்ல நினைக்குதடி
தரணியில் பிறந்த தாரகை பெண்ணே
என்னை தவிக்க விட்டு போகின்றாய் முன்னே
உலகில் உன்னைப்போல் அழகி இல்லையே
உண்மையில் இதுவரை யாரும் பிறக்கவில்லையே
முதல்முறை உன்னைப் பார்த்த நொடி
முழுவதும் நினைவிற்குள் நிற்குதடி
இயங்கும் இதயம் ஏனோ ஏங்குதடி
எப்பொழுதும் உனையது விரும்புமடி
உன்னை தினம் நினைத்து உருகுகின்றேன்
என்னுயிரை உனக்கென்று எழுதித் தருகின்றேன்
காதலை விதைத்து நான் காத்திருக்கின்றேன்
கடைசிவரை உன்னுடன் வாழ நினைக்கின்றேன்.....
ஆத்தங்கர ஒரத்திலே
அந்தி சாயும் நேரத்திலே
மாமன் உன்ன தேடுறேன் புள்ள
மறைஞ்சு ஏண்டி ஓடுற மெல்ல
இங்க எதுக்கு வந்த மாமா
இப்படி இஷ்டத்துக்கு பாக்கலாமா
குளிக்கும் போது நீ வரலாமா
கூவிகூவி என்ன அழைக்கலாமா
அத்த மகளே ஆத்திரம் எதுக்கு
அஞ்சு நிமிசம் நேரம் ஒதுக்கு
ஏழு ஜென்மமும் புருசனா உனக்கு
என்ன எழுதித் தாரேன் உனக்கு
உன் ஆசையெல்லாம் தள்ளி வையி
அடிக்கடி பேசுற நிறய நீ பொய்யி
அடுத்த மாசம் பொறக்குது தையி
வீட்டுக்கு வந்து நிச்சயதாம்பூலம் செய்யி
சீக்கிரமா வந்து போடுறேன்டி பரிசம்
நான் சிவகங்கை சீம மருது வம்சம்
தாலி கட்டுறேன்டி இந்த தை மாசம்
தடுக்க யாரும் வந்தா செஞ்சிருவேன் துவம்சம்..
சுட்டெரிக்கும் உச்சிப்பொழுது
சுந்தரி உன்ன பாத்தபோது
கண்ணு ரெண்டும் குளிருதடி-உன்
கவர்ச்சி என்ன இழுக்குடி
முதல்முறை பார்த்தேனடி
மூச்சை விடக்கூட மறந்தேனடி-உன்
அழகைப் பார்த்து உறைந்தேனடி
அசையா சிலையா ஆனேனடி
தாவனி உடுத்திய தாமரையே-என்னை
தவிக்கவிட்டு போகுறியே
ஏண்டி நீ,இப்படி பாக்குறியே
என்உசுர எடுத்திட்டு போகுறியே
சிரிச்சு சிரிச்சு நீ போற
சின்னாபின்னமா நான் ஆனேன்
திரும்பி திரும்பி நீ பாக்க
திசைய மறந்து நான் போறேன்
ஏதேதோ ஆகிப் போச்சு
எப்போதும் கேட்குது உன்பேச்சு
எல்லாம் இப்ப மாறிப் போச்சு
என்னுள் காதல் வந்தாச்சு...💘
அமைதி காத்த கடலே உனக்கு
ஆனது என்ன,ஆணவம் எதற்கு?
கடலுக்கு கரை இல்லை என,
கண்ணிமைக்கும் நேரத்தில் நிருபித்து விட்டாயே!
நிம்மதி வேண்டி மக்களின் கூட்டம்,
நிமிடம் ஒருமுறை கடற்கரை வருமே.
கடற்கரை வந்த மனிதர்கள் எல்லாம்,
கல்லறை சென்றது உன் சதிதானோ!
கொந்தளிக்கும் உன் அலைகளால்,
கொலைகள் எத்தனை செய்துவிட்டாய்.
மண்ணில் பிறந்த உயிர்களை எல்லாம்,
மரணமாக்கவா நீயும் வந்தாய்.
கடவுள் பூமியை படைக்கும் போதே,
கைப்பற்றி விட்டாய் மூன்று பங்கை.
மூன்று பங்கும் போதாது என்று,
முழு உலகத்தை நீயும் மூழ்கடித்தாயோ!
சமுத்திரம் என்பது உன் பெயர்தான்-
அதில்
சரித்திரம் படைக்கத்தான் சாவுகள் எடுக்கிறாயோ!