உலகம் மாறிப் போச்சு
இப்ப மாறிப் போச்சு உலகமே
இங்கே மனிதன் கூட மிருகமே
நரி வேடம் போட்டு நடக்கிறான்
நல்லவன் போல் நடிக்கிறான்
ஐந்து அறிவு உயிர்கள் கூட
அமைதியாக வாழுதே
ஆறறிவு கொண்டவனோ
அடித்துக் கொண்டே சாகிறானே
தனக்கு மட்டும் என்று ஏனோ
சுயநலம் கொண்டு சுத்துறானே
தந்திரமாய் ஏமாற்றி
தன்குடும்பம் காக்கிறானே
பணத்தின் மீது ஆசை கொண்டு
பைத்தியமாய் திரிகிறானே
பாவங்கள் நிறைய செய்தும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறானே
எல்லாம் நவீனமாகிப் போச்சு
இந்த எந்திர உலகத்திலே
இருந்தும் மனிதன் வாழ்கிறானே
இன்னும் தந்திர நோக்கத்திலே...