என்னை மன்னித்துவிடு
நான் பெற்றெடுத்த
என் அன்பு மகளே மகனே
என்னை மன்னித்துவிடு
மதவெறியர்களும் பதவிவெறியர்களும் பணவெறியர்களும் மனிதமற்ற ரத்தவெறியர்களும் வாழும்
இந்த தேசத்தில்
உன்னை நான்பெற்றத்திற்காக
உன் பிஞ்சி அங்கங்களை
அவர்கள் வீசிய வெடிகுண்டிற்கு
பஞ்சாய் சிதறவிட்டத்திற்காக
என்னை மன்னித்துவிடு
என் மகளே மகனே
என்னை மன்னித்துவிடு
இன்னொரு பிறவி
ஒன்று இருந்தால்
நீயே எனக்கு மகளாய் மகனாய் பிறக்கவேண்டும்
அங்கு மனிதம் மட்டுமே
கடவுளாய் இருக்கவேண்டும்