ஏ கவிஞனே,
கற்கள் விழுந்தன, காயங்கள் ஆயின.
வீக்கம், வலி வந்து நின்றன.
கற்களை எரிந்தவர்கள் யார் ? எப்போது கற்கள் எரியப்பட்டன ? தெளிவாக தெறியவில்லை.
சிலர் அந்த விஷயத்தை ஆறாய்கிறார்கள். சிலர் விழுந்த கற்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். சிலர் வீக்கம், வலிகளுக்கு வைத்தியம் செய்கிறார்கள். நல்லவர்கள் சிலர் மேன்மையான் வைத்தியத்தைத் தேடுகிறார்கள்.
கற்கள் விழுந்தன
மதம், ஜாதி, இனம், இடம் பிறிவுகள்…
கற்கள் விழுந்தன, காயங்கள் ஆயின
சமுதாயித்திலிருந்து உதிரம் வழிகிறது, கண்ணீர் ஊறுகிறது, பூமி நனைந்து விட்டது. ஆகாயம் பேச்சற்றுப் போய் இருக்கிறது. பல நாட்களாக நிலைமை இப்படித்தான் உள்ளது. எதிர்காலத்திலும் நிலைமை இப்படித்தான் இருக்க உள்ளது.
காற்று, நீர், நெருப்பு வெகுண்டு எழ வேண்டும்.
உண்மையான் புரட்சி புரட்சியாக வெடிக்க வேண்டும்.
பூமியின் மேல் சரியான பிரளயம் ஒரு முறையாவது வர வேண்டும்.
ஏ கவிஞனே,
உன்னிடமிருந்து கவித்துவம் பிறக்க வேண்டும்.
.