ரோச்சிஷ்மான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரோச்சிஷ்மான் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 04-Nov-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 70 |
உன்னிடத்திலிருந்து விடுபட்டு உன் நிழல் நிலத்தின் மீது விழுந்தது உன் மீது ஒளி பட்டவுடன்.
ஒளி உன்னை அலம்பியதோ? உன் அழுக்கு உன்னிடமிருந்து கீழே விழுந்தது. ஒரு வேளை ஓளி உன்னை அடித்ததோ? அந்த அடியினால் தான் உன் நிழல் உன்னிடமிருந்து விழுந்து விட்டதோ?
நீ பார்த்தியோ இல்லையோ? ஒளி உன்னைப் பார்த்தது. உன் நிழல் உன்னை விட்டு விலகி போனது.
உன் நிழல் கறுப்பாக உள்ளது. உன்னைப் பின் பற்றுகிறது... உன் கடந்த காலத்தைப் போல. கடந்த காலத்தில் நீ இருந்தது போல உன் நிழல். உன் அழுக்கு உன்னை விட பெரிதாக உள்ளது.
ஒளி உன்னை தொட்ட பிறகாவது நீ ஒளியைப் பார். ஒளிக்குள்ளே பார். உன் நிழலைப் பற்றி விட்டு விடு
நான் உதயமாவேன் நெருப்பைப்போல,
நான் புரண்டோடுவேன் நீரைப்போல,
நான் பேசுவேன் காற்றைப்போல,
நான் இருப்பேன் பூமியைப்போல,
நான் நிற்பேன் வானத்தைப் போல.
நான் யார்?
நான் கவிதையாய் தெரியவருவேன்;
நான் நானாக மின்னுவேன்.
|
நான் உதயமாவேன் நெருப்பைப்போல,
நான் புரண்டோடுவேன் நீரைப்போல,
நான் பேசுவேன் காற்றைப்போல,
நான் இருப்பேன் பூமியைப்போல,
நான் நிற்பேன் வானத்தைப் போல.
நான் யார்?
நான் கவிதையாய் தெரியவருவேன்;
நான் நானாக மின்னுவேன்.
|
வார்த்தைகளின் பின்னல் கவித்துவம் ஆனது போல், பணி நல்ல பயணைத் தந்தது போல் என் சிந்தனை உன் காதல் ஆனது.
என் தேடலுக்கு நீ இருக்கிறாய் என்ற சங்கதி கிடைத்தது.
பாலைவனம் சோலைவனம் ஆனது போல், கல் பூ ஆனது பொல், சத்தம் சங்கீதம் ஆனது போல் நான் பரிணமிக்க வேண்டும்.
என் பாதைக்கு இலக்கு தெரிந்தது.
நினைப்பதுலிருந்து அறிந்துகொள்வதற்க்கு சென்றது போல், கருத்துலிருந்து புரிந்துகொள்ளுதலை அடைந்தது போல், கனவுலிருந்து நனவுக்குள் விழித்துக் கொண்டது போல் நான் மேம்பட வேண்டும்.
என் எண்ணத்திற்கு செயலாற்றல் வந்தது.
பொய் மெய் ஆனது போல் நான் மனிதனாக வேண்டும். உன் மனிதனாக வேண்டும்.
இறைவா!
வார்த்தைகளின் பின்னல் கவித்துவம் ஆனது போல், பணி நல்ல பயணைத் தந்தது போல் என் சிந்தனை உன் காதல் ஆனது.
என் தேடலுக்கு நீ இருக்கிறாய் என்ற சங்கதி கிடைத்தது.
பாலைவனம் சோலைவனம் ஆனது போல், கல் பூ ஆனது பொல், சத்தம் சங்கீதம் ஆனது போல் நான் பரிணமிக்க வேண்டும்.
என் பாதைக்கு இலக்கு தெரிந்தது.
நினைப்பதுலிருந்து அறிந்துகொள்வதற்க்கு சென்றது போல், கருத்துலிருந்து புரிந்துகொள்ளுதலை அடைந்தது போல், கனவுலிருந்து நனவுக்குள் விழித்துக் கொண்டது போல் நான் மேம்பட வேண்டும்.
என் எண்ணத்திற்கு செயலாற்றல் வந்தது.
பொய் மெய் ஆனது போல் நான் மனிதனாக வேண்டும். உன் மனிதனாக வேண்டும்.
இறைவா!
நிறைவாக குறை உள்ளது மனிதனுக்கு
அது வாழ்க்கை என்று ஆனது மனிதனுக்கு
காலம் ஒரு புதிர் போட்டது மனிதனுக்கு
சந்தேகம் கதை சொன்னது மனிதனுக்கு
ஆவல்கள் சூழ்ந்ததாலே அடிபட்டான்
தடுமாற்றம் நிலை கொண்டது மனிதனுக்கு
மதம், ஜாதி இவை அவனைத் துளைத்ததால்
பெரிதளவில் துயர் வந்தது மனிதனுக்கு
வாழ்க்கை பாடலைப் பாடிடவே நின்றான்
சோகம்தான் சுரம் தந்தது மனிதனுக்கு
ஓடி ஓடி வெற்றி பெற்றான் அதன் பிறகு
பாவம்தான் துணை நின்றது மனிதனுக்கு
ரோச்சிஷ்மான், அவன் சென்றான் கேள்வியாக
மரணம் பதிலாய் கிடைத்தது மனிதனுக்கு
நிறைவாக குறை உள்ளது மனிதனுக்கு
அது வாழ்க்கை என்று ஆனது மனிதனுக்கு
காலம் ஒரு புதிர் போட்டது மனிதனுக்கு
சந்தேகம் கதை சொன்னது மனிதனுக்கு
ஆவல்கள் சூழ்ந்ததாலே அடிபட்டான்
தடுமாற்றம் நிலை கொண்டது மனிதனுக்கு
மதம், ஜாதி இவை அவனைத் துளைத்ததால்
பெரிதளவில் துயர் வந்தது மனிதனுக்கு
வாழ்க்கை பாடலைப் பாடிடவே நின்றான்
சோகம்தான் சுரம் தந்தது மனிதனுக்கு
ஓடி ஓடி வெற்றி பெற்றான் அதன் பிறகு
பாவம்தான் துணை நின்றது மனிதனுக்கு
ரோச்சிஷ்மான், அவன் சென்றான் கேள்வியாக
மரணம் பதிலாய் கிடைத்தது மனிதனுக்கு
உணர்வுக் கண்களைத் திறந்து கொள்வோம்,
உறங்கும் சிந்தனையை எழுப்பி விடுவோம்-
உறுதியை உறுதுணையாகக் கொள்வோம்,
உறவென தெம்பினைக் கொள்வோம்-
முயற்சி எனும் பயிற்சியைத் தளர்ச்சி இன்றி செய்வோம்,
வளர்ச்சி என்பது மலர்ச்சிக் கொள்ள பாய்வோம்-
தீமையைத் தீர்த்துக் கட்டுவோம்,
செம்மையானதைப் பதுகாத்து கொள்வோம்-
தவிக்கும் நெஞ்சத்தில்
தவழும் நினைவுகளை திரட்டுவோம்,
ஆனந்தமாக இருப்பவர்களின்
ஆலோசனைகளைத் தேர்ந்தெடுப்போம்-
கொட்டும் உதிரம் கூறும் சங்கதிகளைக் கேட்போம்,
எரிந்து முடிந்த பின்பு எஞ்சி இருப்பதைக் கவனிப்போம்-
அடுத்தவரை அரவணைப்போம்,
அகந்தையைப் புறக்கணிப்போம்-
விழிப்புணர்ச்சியோடு இருப்ப
எப்படி உன்னைக் காதலிக்கும்படி ஆனேன்?
நான் புது பாசத்தால் ரசிக்கும் படி ஆனேன்!
மூடியதே இல்லை கண்களை, ஆயினுமன்பே
உன்னிடமேனோ வந்து சிக்கும்படி ஆனேன்!
உன்னிடமென்னை சேர்த்து விட்டேன், அதனாலே
இவ் உலகத்தில் நான் மதிக்கும்படி ஆனேன்!
புண்னியமெல்லாம் சேர்கக நானின்று முனைந்தேன்
என் மன தோஷத்தை கழிக்கும்படி ஆனேன்!
என்னிட முன்னை கொண்டதாலே இனி வாழும்
நல்ல பொறுப்பொண்றை வகிக்கும்படி ஆனேன்
என் மதியில் நீ தான் இருக்க வேண்டும்
நிம்மதியை நீ தான் கொடுக்க வேண்டும்
வேற்றிகளென்னும் மாரி பெய்ய, ஆசை
என்ற சுழல் மேகம் கருக்க வேண்டும்
நொந்தது போதுமே துணை இல்லாமல்
நாம் இனி தனிமையை நருக்க வேண்டும்
ஜோடிகளை சீராய் மதிக்கவே நாம்
காதிலிலா வாழ்வை வெறுக்க வேண்டும்
வாடிடவா வாழ்க்கை? முயன்று, நன்றாய்
வாழ்ந்திடவே தீங்கை அருக்க வேண்டும்
நினைவெனும் இசையினில் ஸ்வரமானாய் நீ
நினத்ததும் கிடைத்ததால் வரமானாய் நீ
கலக்கமின்றி வாழவே இனி நாளும் நான்,
சுகங்களை புனைந்திடும் கரமானாய் நீ
கசப்புகள் நிறைந்த வாழ்விது, அன்பென்னும்
இனித்திடும் பழம் தரும் மரமானாய் நீ
நலம் பெறும் நிலையினை தருமே காதல்
மகத்துவம் விளைந்திடும் அரமானாய் நீ
தினம் தினம் மனம் மகிழ்ந்திட ரோச்சிஷ்மான்
உயிர் நிலைத்து நிற்கவே தளமானாய் நீ
என் கருத்து காவியம் காணவா நீ
என் மனத்திலே இதம் சேர்க்கவா நீ
துன்பமென்ற தேர்விலே தேரவேண்டும்
நான் சுமக்கும் சோர்வினை தீர்க்கவா நீ
பாடுகின்ற பாடலால் வேண்டுகின்றேன்
என்னிலிலுதித்த காதலை ஏற்கவா நீ
என்நிலையிலும் சுகம் சூழ என்னில்
வாழ்வு என்ற வார்ப்பினை வார்க்கவா நீ
அந்த கால பொற்தமிழ் போலிருப்போம்
வாழ்விலே சுவைகளை கோர்க்கவா நீ