கஜல் 24

என் மதியில் நீ தான் இருக்க வேண்டும்
நிம்மதியை நீ தான் கொடுக்க வேண்டும்

வேற்றிகளென்னும் மாரி பெய்ய, ஆசை
என்ற சுழல் மேகம் கருக்க வேண்டும்

நொந்தது போதுமே துணை இல்லாமல்
நாம் இனி தனிமையை நருக்க வேண்டும்

ஜோடிகளை சீராய் மதிக்கவே நாம்
காதிலிலா வாழ்வை வெறுக்க வேண்டும்

வாடிடவா வாழ்க்கை? முயன்று, நன்றாய்
வாழ்ந்திடவே தீங்கை அருக்க வேண்டும்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (11-Jun-16, 3:18 pm)
பார்வை : 93

மேலே