கஜல்
எப்படி உன்னைக் காதலிக்கும்படி ஆனேன்?
நான் புது பாசத்தால் ரசிக்கும் படி ஆனேன்!
மூடியதே இல்லை கண்களை, ஆயினுமன்பே
உன்னிடமேனோ வந்து சிக்கும்படி ஆனேன்!
உன்னிடமென்னை சேர்த்து விட்டேன், அதனாலே
இவ் உலகத்தில் நான் மதிக்கும்படி ஆனேன்!
புண்னியமெல்லாம் சேர்கக நானின்று முனைந்தேன்
என் மன தோஷத்தை கழிக்கும்படி ஆனேன்!
என்னிட முன்னை கொண்டதாலே இனி வாழும்
நல்ல பொறுப்பொண்றை வகிக்கும்படி ஆனேன்