காதல்
தென்றலாய் வந்த காதல்
இதம் தந்து மணக்க
இன்பம் வந்து அணைக்க
இடையில் புகுந்தது ஊடல்
மெல்ல மெல்ல அனலும்
புகுந்து தென்றல் மறைந்தது
ஊடல் இப்போது மோதல் ஆனது
காதல் போய் புயல் வீசுவதேன்
பொல்லாத சந்தேகம் ஊடலாய் வந்து
புயலாய் மாறி காதலாம் தென்றலை
விழுங்கி இப்போது அமைதியானது
காதல் எங்கே ?எங்கே போனது ?
புயலுக்கு பின்னே அமைதி !