கஜல்

என் கருத்து காவியம் காணவா நீ
என் மனத்திலே இதம் சேர்க்கவா நீ

துன்பமென்ற தேர்விலே தேரவேண்டும்
நான் சுமக்கும் சோர்வினை தீர்க்கவா நீ

பாடுகின்ற பாடலால் வேண்டுகின்றேன்
என்னிலிலுதித்த காதலை ஏற்கவா நீ

என்நிலையிலும் சுகம் சூழ என்னில்
வாழ்வு என்ற வார்ப்பினை வார்க்கவா நீ

அந்த கால பொற்தமிழ் போலிருப்போம்
வாழ்விலே சுவைகளை கோர்க்கவா நீ

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (15-Apr-16, 4:57 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
Tanglish : kajal
பார்வை : 75

மேலே