சிலு சிலுவென அடிக்கும் தென்றக் காத்தினிலே

சிலு சிலுவென அடிக்கும் தென்றக் காத்தினிலே
சிங்கார மாமன் தென்னந் தோப்பினிலே
பள பளன்னு கண்டாங்கி சேலை கட்டி
தென்னையிலே சாஞ்சுகிட்டு நீ பாட்டு படிக்கையிலே
தென்னைக்கு கிடைச்ச சுகம்
என்னைக்கு எனக்கு கிடைக்குமுன்னு
பட படன்னு யேன் நெஞ்சு அடிக்குதடி !

அடி யேன் அத்தை மவளே
தை போயி சித்திரையும் வந்தாச்சு
ஓன் அப்பன் இப்படி யேன் தேமேன்னு கிடக்காண்டி ?
பந்தக்காரன் மேளகாரன் ஐயரு
செல்லுல போட்டா டான்னு வந்து நிப்பாங்க
பின்ன என்னத்துக்கு இழுதடிக்கான் உங்கப்பன் ?
ஆத்துல தண்ணி இல்ல அறுவடையில மேனியில்லன்னு
சாக்குச் சொல்லி சாக்குச் சொல்லி மூனு வருசம் தள்ளிப் போட்டாச்சு
இன்னும் ஒங்கப்பன் சாக்குச் சொன்னா
நீ சக்களத்தியாத்தான் வருவே சொல்லிபுட்டேன் ஆமா ...

அடி ஆத்தி அம்புட்டு அவசரமா
பக்கத்து ஊரு சோசியருகிட்ட நாள் குறிக்க போயிருக்காக

அம்புட்டு தூரம் போயிடுச்சா ...அப்பிடி போடுடி யேன் ராசாத்தி
கோடையில குத்தால அருவியில குளிச்ச மாதிரி இருக்குதே

அது என்ன இப்பிடி பக்கத்துல வாரீய

நான் என்ன அந்நியனா ...நீ என் வருங்கால பெஞ்சாதிதானே

அதுக்காக

அதுக்காக ஒன்னுமில்ல....ஸ்டைலா அணைச்சுகர மாதிரி
உன்னையும் என்னையும் தென்னையும் வச்சு செல்லுல ஒரு செல் ஃ பி
படம் எடுத்த்க்கிடலாம்
சிரிச்சுக்கிட்டே இருக்கனும்....ரொம்ப பல்ல இளிக்காதே செல்லு
வெடிச்சுப்புடும்.
ஆங் அம்புடுதான் ...க்ளிக்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-16, 4:55 pm)
பார்வை : 399

மேலே