ஒளி

உன்னிடத்திலிருந்து விடுபட்டு உன் நிழல்‌ நிலத்தின்‌ மீது விழுந்தது உன் மீது ஒளி பட்டவுடன்.

ஒளி உன்னை அலம்பியதோ? உன் அழுக்கு உன்னிடமிருந்து கீழே விழுந்தது‌. ஒரு வேளை ஓளி உன்னை அடித்ததோ? அந்த அடியினால் தான்‌ உன் நிழல் உன்னிடமிருந்து விழுந்து விட்டதோ?

நீ பார்த்தியோ இல்லையோ? ஒளி‌ உன்னைப் பார்த்தது. உன் நிழல்‌ உன்னை விட்டு விலகி போனது.

உன் நிழல் கறுப்பாக உள்ளது. உன்னைப் பின் பற்றுகிறது... உன் கடந்த காலத்தைப் போல. கடந்த காலத்தில் நீ இருந்தது‌ போல உன் நிழல். உன் அழுக்கு உன்னை விட பெரிதாக உள்ளது‌.

ஒளி‌ உன்னை தொட்ட பிறகாவது நீ ஒளியைப் பார். ஒளிக்குள்ளே பார்‌. உன் நிழலைப்‌‌‌ பற்றி விட்டு விடு.‌ அதை நிலம்‌ சுமக்கும் உன் பிழையை உன் வாழ்க்கை சும்ப்பது போல. வாழ்தலை உதவியாகக் கொண்டு உன்னை நீ துறந்து விட்டு செல் ஓளியை நோக்கி. தவழு ஒளியில்.

எதிர்காலம் ஒளி. கடந்தகாலம் நிழல். நிகழ்காலம் நீ. நீ இருக்கும் வரை‌ கடந்தகாலம் தப்பாது. நிகழ்‌காலமும்‌ கடந்து விடாமல் இருக்காது. கடந்த காலம் உள்ளதென்று எதிர்காலத்தைத் தவற விடாதே.

ஒளிக்கும், நிழலுக்கும் நடுவே நீ உள்ளாய், காம்புக்கும், மலருக்கும் நடுவே இலையப் போல.

உன் நிழல் கீழே விழுந்ததல்லவா? விட்டுவிடு. அதைப் பொறுக்காதே.

ஒளி‌ உயரத்தில் உள்ளது. பார். தூய்மையைப் போல, சுதந்திரத்தைப் போல ஒளி உள்ளது‌. ஒளிக்குள் செல்.‌ ஒளிர்ந்திடவே செல்.‌ ஒளியாய் இருக்கவே செல்.

உயரத்திற்கு உயரு.

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (26-Aug-20, 11:18 am)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 69

மேலே