அமைதி

என் மனமே நீ அமைதி கொள்.
அமைதி நிறைந்த இந்த இயற்க்கை சூழலில் அமைதியாக வாழத்தெரியாத ஒரே ஜீவன் மனிதன் மட்டும் தான். உலக உயிர்களை வாழவைக்கும் வல்லமை தன்னிடம்
இருந்தும் அலட்டிக்கொள்ளாமல்
அமைதியாக உதித்து அமைதியாக மறைகிறது சூரியன். பூக்களின் வாசத்தை ஊர் முழுக்க வீசிவிட்டு ஒன்றும் தெரியாததை போல் அமைதியாக இருக்கிறது தென்றல்.
மலை உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கீழே விழுந்து நதியாக ஓடினாலும்
அதிலும் ஓர் அமைதி இருக்கத்தான் செய்கிறது அருவியிடம். பட்டாடை அணிந்த பிச்சைக்காரன் இயற்கை ரசிக்கும் பணக்காரன். இயற்கை சீற்றம் கண்ட எமதர்மன்
அழகை படைத்து மலைத்த பிரம்மன் என எங்கும் அமைதி எதிலும் அமைதி . ஒரு எறும்பின் சேமிப்பில்
ஒரு தேனீயின் சேகரிப்பில்
எதைக் கற்றாய் நீ?ஒன்றுமில்லையே!! எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் எண்ணிப்பார்க்கவே ஆசை தான் எண்ணித் தான் நாமும் எத்தனை என்று கூற இயலுமா?? நிறுத்தங்கள் நிலையாகவே நிற்கின்றன நாம்தான் வழியறியாது
ஓடிக்கொண்டிருக்கிறோம். நிறுத்தங்கள் நம்மை வரவேற்ககூடும் அமைதியை நாம் உணரும் தருணங்களில்.. சோர்ந்துவிடாதே மனமே உற்றுநோக்கு இன்னும் ஆழமாய்
இப்பிரபஞ்சத்தை மிச்சமிருக்கின்றன இரகசியங்கள்...!

✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (26-Aug-20, 8:37 am)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : amaithi
பார்வை : 1922

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே