போதிமரம்

*********************************************

போதி மரத்தடி
அமர்ந்தவரெலாம்
புத்தனாக ஆவதில்லை

புத்தனாக மாறிவிட்டால்
போதி மரங்கள்
தேவையில்லை

விறகுவெட்டி கோடரிக்கு
போதி மரமும்
விலை பொருளாம்

பண்புள்ள மனிதருக்கு
முள் மரமும்
போதி மரமாம்


*********************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை (25-Aug-20, 10:51 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : poothimaram
பார்வை : 259

மேலே