பாக்யா மணிவண்ணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பாக்யா மணிவண்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Sep-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jul-2020
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  21

என்னைப் பற்றி...

அச்சத்தையே அச்சப்படவைப்பவள். ரௌத்திரம் பழகியவள்.

என் படைப்புகள்
பாக்யா மணிவண்ணன் செய்திகள்
பாக்யா மணிவண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2020 9:15 pm

கடவுள் கேட்கவில்லை கொடுக்கிறார்கள்... மனிதன் கேட்கிறான் மறுக்கிறார்கள். பசியால் அழுதக் குழந்தைக்கு புசியென்றுக் கொடுக்காமல் நீங்கள் விரயம் செய்யும் அனைத்தும் உங்களுக்கு எந்தவிதமான பலனையும் அளிக்கப்போவதில்லை. பசித்தால் உணவு கிடைக்காதா..?
அதிகமாக கேட்கவில்லை உங்களிடம். அவர்கள் பெயர் எழுதிய பருக்கையை கேட்கிறார்கள். உங்களுக்கு தர மனமில்லையா இல்லை அக்குழந்தையின் பெயரை இறைவன் எழுதவேயில்லையா? ருசிக்கு எதை உண்பது தேர்ந்தெடுக்க முடியாமல் மயக்கத்தில் பலர்! இங்கே
பசிக்கு எதை உண்பது என்று எதுவும் கிடைக்காமல் மயக்கத்தில் சிலர்! இப்போது கூட எங்கோ ஒரு வயிறு
சத்தமில்லாமல் சொல்லி கொண்டேயிருக்கும் அய்யோ பசிக

மேலும்

பாக்யா மணிவண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2020 11:06 pm

சிலையைப் பார்த்து வியக்கும் கண்கள் அதைச் செதுக்கிய உளியையோ! கைவிரல்களையோப் பார்ப்பதில்லை. அதுபோலதான் என்னைக்கண்டு வியக்கும் கண்கள் என்னை உருவாக்கிய சிற்பிகளாகிய ஆசிரியர்களைப் பார்ப்பதில்லை.
எனக்குள் தன்னம்பிக்கையை உற்றியவர்கள் என் ஆசிரியர்கள். ஆயுத எழுத்திலும் உலகின் மிக பெரிய ஆயுதம் உள்ளது என்பதை அறிமுகம் செய்தவர்கள். யாருடனும் நீ வீணாக எதிர்த்து நிற்காதே ! உன் பயத்தை எதிர்த்து நில்! என்பார்கள். தப்பு என்றால் தட்டிக்கேட்க தயங்காதே என்பார்கள். எனக்கென்ன தெரியும் என்றால் உனக்கென்ன தெரியாது என்று உன்னிடமே கேள்விகேள் என்பார்கள்.
வாழ்க்கை கலையிழக்கும் பொழுதெல்லாம் கற்பனை கோட்டைகள் பல கட்டிவி

மேலும்

பாக்யா மணிவண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2020 10:57 pm

பாசம் வைத்தாற்ப் போல் நடித்து
வேசம் போடும் நம் உறவுகள் நமக்கு காயம் ஆன பின்னர் தான் மாயம் ஆவர்கள் அதிலிருந்து..! அவர்கள் மொழியின் பொருள் புரியும் முன்னே நம் கண்ணை கலங்க வைத்துவிடுவார்கள். என்னச்செய்வது நாம் கடக்கவியலாத ஆற்றின் பாதையில் தான் நடக்க வேண்டியுள்ளது.. கண்கூசும் ஒளியும், நடைபிறளும் நேரமும், மூழ்கடித்துவிடுமோ! என்று ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும் என்றச் சிந்தனையுடன் சோகத்தைக் கொண்டு நடக்கையில் நீண்டுதான் செல்கிறது ஆறு. வலிகளே வாழ்வின் வழித்துணை என்னும் எண்ணத்தை விடுத்து, வழிக்காட்ட என் இறைவன் என்னுடன் என்ற நம்பிக்கையை நமக்குள் உருவாக்குவோம்...

மேலும்

பாக்யா மணிவண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2020 11:01 pm

பிறர் செய்தத் தவறுக்கு நான் பெற்றத் தண்டனை அவர்களுக்கு நான் கொடுக்கப்போகும் மன்னிப்பு. எதிரியையும் மன்னிக்கப் பழகிகொண்டவள் நான் ஆனால் பிழையாகக் கூட மன்னிக்க மறுத்து விடுவேன் துரோகியை. உங்கள் தவறுகளை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதவள் அல்ல நான். உங்கள் தவறுகள் என்னைப் போன்று மற்றவர்களையும் காயப்படுத்திவிடும் என்ற அச்சமே என்னுள் அதிகம். மன்னிப்பு அடுத்தத் தவறின் ஆரம்பமாக இருக்கக் கூடாது. உங்களுடைய செயல் தவறு என்று பிறர் சுட்டிக்காட்டும் முன் உங்கள் மனம் உறுத்தல் கொள்ளுமாயின் மன்னிப்புக் கேட்கத் தாமதம் கூடச் செய்யாதிர்கள்.... நீங்கள் செய்தத் தவறுகளை மன்னிக்க முயற்சிக்கிறேன். ஆனால் மறந்து விட மாட்ட

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே