மனிதனின் மறுப்பக்கம்

கடவுள் கேட்கவில்லை கொடுக்கிறார்கள்... மனிதன் கேட்கிறான் மறுக்கிறார்கள். பசியால் அழுதக் குழந்தைக்கு புசியென்றுக் கொடுக்காமல் நீங்கள் விரயம் செய்யும் அனைத்தும் உங்களுக்கு எந்தவிதமான பலனையும் அளிக்கப்போவதில்லை. பசித்தால் உணவு கிடைக்காதா..?
அதிகமாக கேட்கவில்லை உங்களிடம். அவர்கள் பெயர் எழுதிய பருக்கையை கேட்கிறார்கள். உங்களுக்கு தர மனமில்லையா இல்லை அக்குழந்தையின் பெயரை இறைவன் எழுதவேயில்லையா? ருசிக்கு எதை உண்பது தேர்ந்தெடுக்க முடியாமல் மயக்கத்தில் பலர்! இங்கே
பசிக்கு எதை உண்பது என்று எதுவும் கிடைக்காமல் மயக்கத்தில் சிலர்! இப்போது கூட எங்கோ ஒரு வயிறு
சத்தமில்லாமல் சொல்லி கொண்டேயிருக்கும் அய்யோ பசிக்குதே!! அம்மா பசிக்கிறது புசிக்க ஏதாவது தாருங்கள் என்று.. பரந்துக் கிடக்கும் இம்மனித சாம்ராஜ்யத்தில்
மனிதம் ஆறடியில் மனிதன் அதன் பிடியில் என்றானபின்னர் மனிதநேயம் என்பது எங்கோ போனது.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (9-Sep-20, 9:15 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
பார்வை : 1107

மேலே