ஆழ்கடல்

கட்டுமர
பயணத்தில்
கட்டுடல்
பரவன் ...

காற்றோடு
கடலில்
கயல் மீனை தேடி..

கண் உறங்கா
இரவுகளில்
அலையோடும்
வலையோடும்
எதிர்நீச்சல் போட்டு ..

ஆழ்கடல்
அமைதியில்
ஆமைகளை பிடித்தாலும்
திமிர் கொண்ட
திமிங்கலமும்
எதிர்கொன்டு மிரட்டையில....

திக்கற்று
திசையற்று
வயிற்றோடு
பசியுற்று-அபரிமீத
மீனோடும் -ஆழ் கடல்
நண்டோடும்
படகிலே வந்தாலும்
கடல் எல்லை
அதிகாரி கப்பம் கேட்குறான்....

கட்டுன மனைவிக்கு
கன்டாங்கி புடவையில்லை
கருவாட்டை வித்தல்ல
காலத்தை கடத்தவேண்டும் .
உலர்த்திய கருவாடும்
மழையில ஈராமாச்சே....

மனதோடு புலம்பியல்லோ
கடலோடு நான் வந்தா
கட்டுடல் அதிகாரி
பொட்டுனு சுட்டுப்புட்டான்
எல்லையை தான்டுனா
இதுதான் கதியென்று.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (9-Sep-20, 7:02 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : aalkadal
பார்வை : 184

மேலே