இறைவனைக் கண்டார் இவர்
கடுந்தவம் யாதும் புரிய வில்லை
வாடும் படி விரதம் பூண வில்லை
அனுதினமும் பக்தியால் 'அவன்' மீது
'அவன்' நாமத்தால் பாடியே அர்ச்சித்தான்
ஆடியும் பாடியும் மகிழ்ந்தான் அவன்
அவன் முகத்து தேசு உள்ளத்தால்
அவன் இறைவனைக் கண்டுகொண்டான்
என்கிறதே என்கிறதே எனக்கதுவே