நானும் மீனினமே-வாழ்க்கையின் அனுபவம்

வாழ்தலா சாதலா
என்கிற புரியாத போக்கில் வாழ்க்கை -
வியர்வை சிந்தியும்
வெற்றிதான் இல்லை !

காலம் என்னை
மிக கடுமையாகத்தான் சோதித்து பார்க்கிறது -
அதிர்ஷ்டம் இல்லை
ஆனால் அனுபவம் கிடைத்திருக்கிறது !

இருப்பை வைத்து மதிப்பிடும் உலகத்தில்
இருப்பதற்காக போராடுகிறேன் -
இழந்தவற்றின் வரிசையில்
இறப்பு மட்டும் மீதமிருக்கிறது !

சோதனைக்கு பின் சாதனை என்று
எத்தனையோ போதனை இருந்தும்
வேதனைகள் இருட்டில்
விம்மி அழுதுகொண்டிருக்கிறேன் !

விடுபட்ட பொருளாதாரத்தால் சிக்கி
தடைபட்ட முயற்சிகள்
அறுபட்ட வாழ்க்கை சங்கிலி
எடுபடாத ஏக்கத்தில் எதிர்காலம் !

தன்னம்பிக்கை போராட்டம்
எத்தனைதான் இருந்தாலும்
தடைகளுக்கு பஞ்சமில்லை
இந்த விடை கிடைக்காத வாழ்கையில் !

காலை முதல் மாலை வரை
சதா சாதிக்கும் சிந்தனைதான் !

முயற்சி முயற்சி என்று
பயிற்சி பலகொண்டும்
வாழ்க்கை இன்றுவரை
வழுக்கிகொண்டுதான் இருக்கிறது !

என்னதான் சூரியன் சுட்டுக்கொன்றாலும்
பீனிக்ஸ் மாதிரி இறப்பு வரைக்கும்
இலக்கை விடப்போவதில்லை !

எது எப்படி போனாலும்
இயன்றவரையில் என்றைக்குமே
இலக்கு அடையும்வரை எதிநீச்சல் போடுவதில்
நானும் மீனினமே !

எழுதியவர் : விநாயகமுருகன் (9-Sep-20, 9:29 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 254

மேலே