மானோடுறவாடும் மௌன விழியேந்தி

இசைபாட தென்றல் இளந்தென்னை ஆட
அசைந்திடும் கீற்றும் அழகுப்பூ வோடாட
மானோ டுறவாடும் மௌன விழியேந்தி
வானோ டுறவாடும் நீல விழியினள்
தேனிதழாள் நீயும்வந் தாய்

---- பல விகற்ப பஃறொடை வெண்பா-


மானோ டுறவாடும் மௌன விழியேந்தி
வானோ டுறவாடும் நீல விழியினள்
தேனிதழாள் நீயும்வந் தாய்

-----ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

இசைபாட தென்றல் இளந்தென்னை ஆட
அசையும் சிலைவந்தாய் அங்கு

---ஒரு விகற்பக் குறள் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-25, 11:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே