அழகே வா

புன்னகை ஆறே பொன்னெழி லாளே
புந்தியி லேதோ தகராறே
உன்னெழி லோடே ஒன்றிய தேதோ
உன்னத மாகா துறலாமா
*
முன்னுரை காணா முன்னணி யேடா (ய்)
முன்வரு வாயே முகநூலா
மின்மினி யாளே மென்னிடை யூடே
மின்னலை ஏனோ வரை(ந்)தாயோ
*
கன்னலி னூரே கண்ணகி யாளே
கண்களி னாலே கதைபேசா
கன்னியு(ன்) னாலே கண்ணிமை ஏதோ
கண்டது தானே கனவாயே
*
மன்மத னோதா மந்திர(ப்) பூவே
மன்னவ னோடே வருவாயா
அன்பொடு நாமே இன்புற லாமே
அந்நிய மாகா தழகேவா!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ். (26-Mar-25, 3:44 am)
பார்வை : 123

மேலே