நானறிந்த கடவுளும் மெய்ஞானமும்

நமது தோற்றத்திற்கு
தாயும் தந்தையும்
காரணம் என்கின்றோம்
வானத்தில் சுற்றுலாவும்
செயற்கைக் கோள்கள்
இன்னும் பல பல வின்கண்கள்
படைத்தவர் விஞானிகள் என்கின்றோம்

ஆனால் இந்த மண்ணில் காணும்
உயிர் இனங்கள் அத்தனையும்
படைத்தவன் ஒருவன் உண்டு
அவனே இறைவன் என்றால்
ஏற்க மறுக்கும் மூர்க்க மானிடம்


வானில் பவனி வரும் விண்மீன்கள்
எத்தனை ஆயிரம் எத்தனை ஆயிரம் யாரறிவார்
அவற்றைச் சார்ந்த கோள்கள் எத்தனை எத்தனை
சந்திர சூரியர்கள் எத்தனை எண்ணிலடங்கா
தானாய் வந்தனவா இந்த அண்ட சராசரங்கள் !
வந்த சுவடே தெரியாது இவை மறைந்தும் போகும் ஒரு நாள்!
இது படைப்பின் இரகசியம் அவனே அறிவான்
அவன் மட்டும் தான்
அலகிலா விளையாட்டுடையான் அண்ணல் அவன்
அவனின்றி ஓர் அணுவும் அசையாது
என்றும் அசையப் போவதும் இல்லை
இதுவே இறை ஞானம் மெய்ஞானம் இதுவே

அவன் நமக்களித்த இயற்கையில் இருந்து
சிலவற்றை அவ்வப்போது கண்டெடுத்து
அதைக் கொண்டு நமக்கென்று அவ்வப்போது
ஏதேதோ செய்து நமது கண்டுபிடிப்பு என்று
மார்தட்டி இறுமாப்பில் படைத்தவனை மறுக்கின்றோம்
இது விஞானம் என்று கூறினால் இது ஞானம் அல்ல
வெறும் பொய்ஞானம் அறியாமையே

அவன் இருக்கின்றான் அவன் பாதம் நினைப்போம்
அடைந்திட ஞானம் தேடுவோம் குருவை நாடி
நல்ல குரு ஞானம் புகட்டுவான் பேரின்பம் வழியும் காட்டியே

இறைவன் உண்மை உண்மையை நாடுவோம்
யாக்கை நிலையாமை புரிந்துகொள்வோம்
உண்மைக்கு அழிவென்பதே இல்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Mar-25, 2:49 pm)
பார்வை : 49

மேலே