அகச் சிகிச்சை

அகச் சிகிச்சை

புதுசா
வாங்கின பேனா
கண்ணீர் வடிக்க
வெள்ளைத் தாள்
மிரண்டு போனது !

எதையும் தாங்கும்
இதயம்
அடை பட்டு
தரமான நிலையில்
வினியோகம் காண
கடல் கடந்து
திரவியம் தேட
உண்மை போட்டு
உளரிவிட்டது உத்தமனாய் !

இளமையில்
நன்றாக பயனிக்க
கை நழுவிட
நேர்ந்த சிறு அடி
கண் பாதிப்போடு
முதுமை வறட்சி…

எழுதி வியக்க
அகச் சிகிச்சை
இன்று
தீக்குச்சு செய்தது
தீண்டிய கந்தகம்
என் வாசலை
சூரையாட ….
பிழைத்துக் கொண்டேன்
மீண்டும் எச்சிலை உமிழ….

எழுதியவர் : மு.தருமராஜு (25-Mar-25, 1:08 pm)
பார்வை : 35

மேலே