சிற்பிக்களே ஆசிரியர்கள்

உலக அதிசயமாகவே இருந்தாலும் மனம் விரும்பினால்தான் ரசிக்க முடியும். அப்படி என் வாழ்வில் நான் ரசித்து சென்ற கோவில் பள்ளி. நான் தரிசித்த தெய்வம் ஆசிரியர்கள். படி என பாடஞ்சொல்லும் நீங்கள் தெய்வத்தினும் ஒரு படி மேல் தான். நான் இந்த உலகத்தையரிய எந்த எதிர்பார்ப்புமின்றி எனக்காக மனதார வேண்டிய மனம் எந்தன் ஆசிரியர்களின் மனம். சொல் உளி கொண்டு என் உள் ஓளி செதுக்கி கல்லும் உடையாமல் சிலையும் சிதறாமல் என்னை செதுக்கிய சிற்பிக்கள் நீங்கள். சிலகசப்புக்களை விழுங்கக் கற்றுக்கொள். இல்லையேல் இனிப்பின் சுவையறியப்படாமல் போய்விடும். என்றுரைத்தீர்கள். ஓர் நாள் உங்களையே மிஞ்சி நான் வாழ்வில் உயர்ந்து நின்றாலும்.. என்னை கண்டு பொறாமைக் கொள்ள மாட்டிர்கள். இவள் என் பிள்ளை என்று பெருமிதம் கொள்வீர்கள். எவ்வித கர்வமும் இன்றி வாழ்க்கையில் சிகரம் தொட்ட அனைத்து கால்களின் ஏணிபடிகளே உங்களின் பாதங்களை தொட்டுவணங்குகிறேன்.
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன் (5-Sep-21, 2:30 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
பார்வை : 91

மேலே