அது ஒரு காலம்
அது ஒரு காலம்.
"புத்தன் பிறந்து,
பலர் மனதில் அமர்ந்து,
பார்க்கும் இடமெல்லாம்
பரந்திருந்தான்,"
அது ஒரு காலம்.
" ஜாதிகள் மறைந்து,
உயர்வு தாழ்வு அகன்று,
உலகம் உய்ந்தது ."
அது ஒரு காலம்.
பார்த்தே பயந்த
பார்ப்பணர்,
பல திட்டம் தீட்டி,
பிறந்த நாட்டிலேயே
புதைத்தார் அவனை,அது ஒரு காலம்.
பாவம் செய்தோம்,
பாவிகள் ஆனோம்.
மன்னித்தே எம்மை,
மீண்டும் வந்து - நீ
மீட்சி தரவேண்டும்.
வந்தாயானால் !!
மீண்டும் உன்னை
புதைக்க விடமாட்டோம்,
இது எங்கள் உயிர் மேல்
சத்தியம் சத்தியம்.
ஆக்கம்,
சண்டியூர் பாலன்.
(பிறப்பால் இந்து,
மனத்தால் புத்தம்)