சொந்தமெனச் சொல்வேன் சுளு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
இயற்றுகின்ற பாவகைகள் எத்தனையோ சொல்வேன்
தயக்கமின்றி நானெழுதத் தானே – வியப்பெனவே
வந்துநிற்கும் வெண்பாவும் வாகாய் விருத்தமுந்தான்
சொந்தமெனச் சொல்வேன் சுளு!
- வ.க.கன்னியப்பன்
*சுளு: சுலபம்; எளிது