அவமானம்
அவமானங்களால் புரையோடி போயிருக்கும் என் காயங்கள். இது உடல் காயமல்ல உள்ளத்தின் காயம்.இதற்காக பலவற்றை பணயம் வைத்தவள் நான். எதிர்பார்ப்புதானே ஏமாற்றத்திற்கு வித்து. பச்சை நிறத்து இலைகளும் வெள்ளை நிலவும் ஏன் கருப்பாக சிவப்பாக இல்லை என்று எப்போதாவது கவலைப் பட்டது உண்டா..? நீ ஏன் கவலைக் கொள்கிறாய்... உன்னால் மாற்ற முடியாதவைகளோடு மோதி மூச்சிரைப்பதை நிறுத்தி
மாற்றத்தை உன்னிடத்தில் ஏற்படுத்திக் கொள். ஏமாற்றங்கள் ஓடி விடும்! என்ற தாரகமந்திரம் கொண்டவள். கண்ணீர் என்னை பலவீனப்படுத்திவிடும் என்பதாலேயே கவலை என்றாலும் கண்ணீர் சிந்துவதில்லை. பிறரின் நேசிப்புக்கும் ஆறுதலுக்கும் ஏங்கி உன்னை நீ ஏமாற்றாதே! உன்னைப்போல் வேறெவராலும் உன்னை நேசிக்க இயலாது என்று தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டவள். இப்படி எனக்கான ஒரு உலகத்தை நானே வடிவமைத்து நான் ராணி என்ற கர்வம் கொண்டு முன்னேற்றத்திற்காக ஒடியவள். எதையோ தேடி எங்கோ செல்கிறோம்
யாருக்கும் சொல்லாமலே வீதியில் நின்று விதியைத் தேடினால் வழி தெரியும் என்று, என்றோ ஒருநாள்
நின்று பார்ப்பின் மீளுமா
தொலைந்த வாழ்க்கை. என் முன்னேற்றத்தைப் பார்ப்பவர்களே அதற்கான என் முயற்சியைப் பாருங்கள். நான் இழந்தவை ஏராளம். அதனால் தானோ என்னவொ உங்களின் ஏளனப்பேச்சுக்களுக்கு இன்றளவும் நான் செவிசாய்ப்பதேயில்லை. என் சுயமரியாதையை சுட்டுக்கொள்ளும் அளவிற்கு யாரையும் அனுசரித்துப்போக விருப்பமுமில்லை. இது தலைக்கணமல்ல தன்மானம். மரணமே என்றாலும் யார் முன்பும் எதற்காகவும் மண்டியிடாது என் கால்கள்.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.