சிங்கம் நரிகள் ஆட்டம்
குள்ள நரிகள் குதுகலத்தில் கும்மாளமிடுகின்றன
சிறைப்பட்ட சிங்கம் விடுபட்டால் சீறி கொல்லுமோ
சிறையில் பட்ட காயத்திற்கு சீலையால் மருந்திடுமோ
பசலைக் கொடிபோல் படர்ந்திருப்பதையே
பாதுகாப்பாய் எண்ணி படோடமாய் பம்மாத்தில் நரிகள்
பாதுகாப்பு வேலியாய் பல ஆண்டுகளாய் சிங்கம்
பதுங்கிருந்த நரிகளுக்கு கிரீடம் சூட்டி பரவசமூட்டியது
அரியணை ஏறிய ஆவலில் நரிகள் சிம்மமாய் அடவில்
பதவியை பகிர்வதற்கே நரிகளுக்கு நாக்கு தள்ள
பதவியைக் கொடுத்த சிங்கம் பட்டென்று வந்தால்
பாதுகாப்புக் கொடுக்கும் நரிக் கூட்ட கும்பல்
பாதுகாப்புக்கு சிம்மத்தை நாடுமோ நரியை காக்குமோ
பார்க்கத்தானே போகின்றோம் சிம்ம நரி ஆட்டத்தை .
-------- நன்னாடன்