வாழும் தெய்வங்கள் ஆசிரியர்கள்

சிலையைப் பார்த்து வியக்கும் கண்கள் அதைச் செதுக்கிய உளியையோ! கைவிரல்களையோப் பார்ப்பதில்லை. அதுபோலதான் என்னைக்கண்டு வியக்கும் கண்கள் என்னை உருவாக்கிய சிற்பிகளாகிய ஆசிரியர்களைப் பார்ப்பதில்லை.
எனக்குள் தன்னம்பிக்கையை உற்றியவர்கள் என் ஆசிரியர்கள். ஆயுத எழுத்திலும் உலகின் மிக பெரிய ஆயுதம் உள்ளது என்பதை அறிமுகம் செய்தவர்கள். யாருடனும் நீ வீணாக எதிர்த்து நிற்காதே ! உன் பயத்தை எதிர்த்து நில்! என்பார்கள். தப்பு என்றால் தட்டிக்கேட்க தயங்காதே என்பார்கள். எனக்கென்ன தெரியும் என்றால் உனக்கென்ன தெரியாது என்று உன்னிடமே கேள்விகேள் என்பார்கள்.
வாழ்க்கை கலையிழக்கும் பொழுதெல்லாம் கற்பனை கோட்டைகள் பல கட்டிவிடு. முயற்சிகள் செய்! காலமதை நிஜமாக்குமென தைரியம் தந்தவர்கள். கரும்பலகையில் உலகை வெள்ளை அடித்து காட்டியவர்கள். என்னை எனக்கே யார் என்று அறிமுகம் செய்தவர்கள். என்னைச் செதுக்கிசிதைக்கவில்லை நீங்கள் அழகான சிற்பச்சிலையாக மாற்றிவிட்டிர்கள். உங்களின் மலர் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். உங்களிடம் கற்ற என் நல்வாழ்கை பாழானால் கற்பித்தவர்களை இவ்வுலகம் பழிசொல்லும். விழாது அவ்வீண்பழி உங்கள்மேல் வாழ்ந்துடுவேன் இவ்வுலகில் நல்வழியில் நானும்... வாழும் தெய்வங்களான ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (4-Sep-20, 11:06 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
பார்வை : 123

மேலே