உதயங்களைப் புரிந்துக் கொள்வோம்

உணர்வுக் கண்களைத் திறந்து கொள்வோம்,
உறங்கும் சிந்தனையை எழுப்பி விடுவோம்-

உறுதியை உறுதுணையாகக் கொள்வோம்,
உறவென தெம்பினைக் கொள்வோம்-

முயற்சி எனும் பயிற்சியைத் தளர்ச்சி இன்றி செய்வோம்,
வளர்ச்சி என்பது மலர்ச்சிக் கொள்ள பாய்வோம்-

தீமையைத் தீர்த்துக் கட்டுவோம்,
செம்மையானதைப் பதுகாத்து கொள்வோம்-

தவிக்கும் நெஞ்சத்தில்
தவழும் நினைவுகளை திரட்டுவோம்,
ஆனந்தமாக இருப்பவர்களின்
ஆலோசனைகளைத் தேர்ந்தெடுப்போம்-

கொட்டும் உதிரம் கூறும் சங்கதிகளைக் கேட்போம்,
எரிந்து முடிந்த பின்பு எஞ்சி இருப்பதைக் கவனிப்போம்-

அடுத்தவரை அரவணைப்போம்,
அகந்தையைப் புறக்கணிப்போம்-

விழிப்புணர்ச்சியோடு இருப்போம்
அழிவிலிருந்து மீளுவோம்-

கரைகளை எடுக்க கைகளை நியமிப்போம்,
கருணை காட்டுவதை நியமமாக்குவோம்-

வண்முறையை அகற்றி
நன்முறைகளை விதைப்போம்,
இல்லாமல் போண தூய்மையை
இச்சையோடு வரவழைப்போம்-

வாடுவது நமக்கு வாடிக்கை அல்ல என்பதை
ஓடி ஓடி அறிவிப்போம்,
ஓங்கிக் கொன்டிருக்கும் மடமையை
ஓட்டு மொத்தமாய் துண்டிப்போம்-

எடுக்கும் மூச்சில் கூற்மையை நிறப்புவோம்,
விடுக்கும் மூச்சால் நேர்மையைப் பறப்புவோம்-

பண்பைப் பயிராக்குவோம்,
அன்பைப் பரிமாறுவோம்-

பார் மிசை பயமின்றியே பவனி வருவோம்
பக்கத்தில் இருப்பவருக்கு பரிவை நல்குவோம்-

பிரச்சனைகளை எதிர் கொள்வோம்
தீர்வுகளை எட்டிப் பிடிப்போம்-

மான்மியங்களை நரம்புகளில் நடமாடச் செய்வோம்,
மேன்மைகளை உள்ளமாக்கிக் கொள்வோம்-

ஏக்கத்துக்கும் சுரமுண்டு
அதைப் புலனாக்கிக் கொள்வோம்,
கலக்கத்துக்கும் நிறமுண்டு
அதைத் துடைத்து விடுவோம்-
அவனி எங்கும் அமைதியைப் பதிவு செய்வோம்,
ஞாலத்தில் நிம்மதியைப் பதியச் செய்வோம்-

ஆவல்கள் எனும் பறவைகளை
வாய்ப்புகள் எனும் வெட்டவெளியில் பறக்க விடுவோம்,
இதயம் எனும் தாளில் வேட்கைகளால்
திருப்தி எனும் ஓவியத்தை வரையச் செய்வோம்-

தோல்வியைத் தோற்கடிப்போம்,
வெற்றியாய் சிறப்போம்-

வழியும் கண்ணீரை சந்திப்போம்,
வலி ஆற வகை செய்வோம்-

பாழாய் போன இயந்திரங்கள் அல்ல நாம்
எடுத்து வந்த அவதாரங்கள் நாம்
இருக்கும் வரை செழிப்போம்,
மாண்டு போயினும் மணப்போம்-

வசையிலிருந்து விலகி விடுவோம்,
ரசிப்பதை மட்டுமே பழுகுவோம்-

போராடுவதிலேயே இளைப்பாறுவோம்,
சுமைகளில் சுவைகளை அனுபவிப்போம்-

காலத்தைக் காதலிப்போம்,
காவியங்களாய் மின்னுவோம்-

கற்போம் நிலைத்து நிற்போம்,
நம் சந்ததிகளுக்கு சன்னதி யாவோம்-

ஆயுதங்களை மாய்ப்போம்,
அட்சரங்களை எய்யுவோம்-

சிந்திய வியற்வையை மதிப்போம்,
செயல் வீரகளைத் துதிப்போம்-

கருதுவதிலிருந்து வெளியேறுவோம்,
அறிதலுக்குள் நுழைந்து விடுவோம்-

கல் மண்ணைப் பிறியாமல் இருக்கிறது
அதன் நிலைபாட்டைப் பாராட்டுவோம்,
அதோ புல்
அதை ஒரு கிருதியென பார்ப்போம்-

பெய்யும் மழையுடன் அளவளாவுவோம்,
பொழியும் பனியுடன் விளையாடுவோம்-

வெய்யிலோடு மய்யல் கொள்வோம்,
மாலையோடு ஜாலம் செய்வோம்-

இருளின் ஒளியை தரிசிப்போம்,
வெளிச்சத்தின் எழிலை ஸ்பரிசிப்போம்-

மன நோய்களைக் குணபடுத்திக் கொள்வோம்,
தினமும் சுபாவத்தைப் பண்படுத்திக் கொள்வோம்-

நாழிகைகள் கழிந்தால் பொழுதும் சாயும்
சமயம் புரண்டால் முழு நிலவும் தேயும்
குறைகளால் மிரளாதிருப்போம்,
திறமையால் தேரி விடுவோம-

இங்கிதத்தை இயங்க வைப்போம்,
நட்பெனும் நாட்டியமாடுவோம்-

பலர் சொல்லுவதால் பொய்கள் உண்மைகளாகாது
சிலருக்கு மட்டுமே தெரித்தால் உண்மைகள் பொய்களாகாது
நாம் ஆராய்வோம்,
நல்லறிவைச் சாருவோம்-

வாழ்க்கையின் இருதியிலே
மரணமெனும் மாயச்சந்தையிலே
உயிர் பரிபோகும்
விலை இல்லா பொருளாய் அது ஆகும்
பிறவி அழுகிப்போகாமலிருக்க முனைவோம்,
பிறருக்கு முன்னோடிகளாய் விளங்குவோம்-

உரைகளால் விளக்கங்கள் கிடைப்பதில்லை
உபதேசங்களால் குழப்பங்கள் கரைவதில்லை
உற்று நோக்கக் கற்றுக்கொள்வோம்,
உட்கருவை உள் வாங்கிக்கொள்வோம்-

புலவர்கள் விரைந்தார்கள்
புலமையை வீசினார்கள்
வேண்டியது கூடவில்லை
வெற்றிடங்கள நிறம்பவில்லை
விரும்பி விரும்பி பரிசோதிப்போம்,
விஷயங்கள் விளங்க பரிசீலிப்போம்-

விஞானத்தால் விபரீதங்களும் குவிந்தன
நல் ஞனத்தால் விடுபடுவோம்,
வேகத்தால் காயங்கள் ஆயின
விவேகத்தால் தேற்றிக்கொள்வோம்

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
நடப்பதெல்லாம் நினைத்ததில்லை
நடப்பதை பட்டிப்பினை ஆக்கிக்கொள்வோம்,
நடைமுறையில் தெளிவோடிருப்போம்-

உகந்த்தை நுகர்வோம்,
தகுந்ததை முகர்வோம்-

உழைப்பால் மட்டுமே பிழைப்போம்,
பிழையாய் அன்றி சரியாய் இருப்போம்-

விளைச்சலை அணைத்துக்கொள்வோம்,
சங்கோஜமின்றி சந்தோஷப்படுவோம்-

மோதும் நீரலைகளால் மலை கலைவதில்லை,
குத்தும் பிரச்சனைகளால் குலையாமலிருப்போம்,
முற்கள் இருப்பதால் ரோஜா அரும்பாமலிருப்பதில்லை
கஷ்டங்கள் சூழும் போது கனிவோடிருப்போம்-

பாடு படுவதில் ஈடு படுவோம்,
பகட்டு திகட்டுகிறது
அதை துப்பி விடுவோம்-

நாம் மஹான்களாவோம்,
நம்மை நாமெ செதுக்கிக்கொள்வோம்-

வழியில் பள்ளம் மேடுகள் இருக்கும்
பயணத்தை சீராகச் செய்வோம்,
போக்கில் வளைவுகள் இருக்கும்
இலக்கை நேராக எட்டுவோம்-

தயங்காமல் வாழ்வோம்,
தடைகளைத் தகர்த்தி தலை நிமிர்வோம்-

வரிகளை அல்ல அர்த்தங்களை வாசிப்போம்,
ஓசை ஓய்ந்த்தும் இசை ஓலிக்கும்
அதற்கு செவி கொடுப்போம்-

விற்பனைக்கு இல்லாததைப் போற்றுவோம்,
கற்பனைகளையும் களங்க மிண்றி வடிப்போம்-

சரிவைத் தடுக்க தரமாய் இருப்போம்,
நிறைவாய் நெகிழ நெறியை அறிவோம்-

கடலை உடலில் அடைவோம்,
கம்பீரத்தால் அணைவரையும் ஈர்போம்,
ஆதவனை அன்றாடம் அணுகுவோம்
அதிராமல் அஞ்சாமல் அசைவோம்-

புகை போல் வரும் துயர்த்தைத் துரத்துவோம்,
சுகமான வாழ்வை சுயமாக சாதிப்போம்-

நகரும் நாட்களுக்குள் நலிந்து போகாமலிருப்போம்
புகழ் கொண்டு பிரபலாமுகும் கதைகளாவோம்-

மௌனத்துக்கும் ஸ்ருதி உண்டு
அதில் நாதம் பிடிப்போம்,
தியானமும் கானம்தானன்றோ?
அதை நாளும் படிப்போம்-

ஏமாற்றமில்லா ஏற்றங்களைத் தோற்றுவிப்பொம்,
முற்றற்ற பற்றால் ஒற்றுமையை ஏற்றி வைப்போம்-

ஆசைகளுக்கு ஆயுளை அளிப்பொம்,
ஆற்றலை அரங்கங்களுக்கு அனுப்புவோம்-

மறைந்திருக்கும் மர்மங்களை அள்ளிக்கொள்வோம்,
இறந்தவனில் பதுங்கி இருப்பதைப் பாடமாக்குவோம்-

இளமையை என்றும் அணிந்திருப்போம்,
முடக்கம் என்பதே முதுமை
அதில் மாட்டிக்கொள்ளாதிருப்போம்-

இயற்கை புன்னகைத்ததோ? கற்று வந்த்து
காற்றைப் பின்பற்றுவோம்,
எந்த அருள் விரிந்த்தோ? வானம் அமைந்த்து
வானம் வழங்கும் தானங்களைப் பெறுவோம்-

பாஷைக்கு இணங்காத
பாவங்களால் பதையைப் போடுவோம்,
எழுத்துக்கள் காட்டாத
இடங்களுக்கு செல்வோம்-

வாதங்களைக் கொய்வோம்,
வாய்மையை நெய்வோம்-

நெத்தியடி கொடுத்தாவது பித்தியைப் புகட்டுவோம்,
தேவைக்கேற்றவாறு சேவைகள் செய்வோம்-

பாவங்களை ஓழிக்க புரட்சிகளைச் செய்வோம்,
புண்ணியங்களைப் பெருக்க வாழ்தலை வளைப்போம்-

இன்னுமா பிறிவுகள்?
உறசல்கள் இல்லாமல் இருப்போம்,
எவ்வளவுதான் சண்டையிடுவது
சீர் கெடாமலிருப்போம்-

வேறொரு உலகுக்கும் பெயருவோம்,
மறுபிடியும் நாம் உருவெடுப்போம்-

மங்காத சோலைகளில் நாம் மாலைகளைச் சூடுவோம்,
மயங்காத அலைகளில் நாம் மிதந்து கொண்டிருப்போம்-

போன மானத்தையும் திரும்ப வெல்லலாம்
அடி பட்டாலும் துவளாமலிருப்போம்,
நொந்த பிறகும் சிகர்ங்களில் உலவலாம்
துன்பத்தினால் தளராமிலிருப்போம்-

வடிவம் கொள்ளாத நட்சத்திரம் ஒன்று யாசிக்கிறது
“எனக்கு பொலிவுகள் வேண்டும்” என்று
தாமதமின்றி பணி செய்வோம்,
இல்லாததொன்று இல்லம் கட்டிக்கொள்ள
இடத்துக்காக அலைகிறது
தாழ்ந்து போகாமலிருப்போம்-

தாகம் தணிக்கும் பாடல்கள் உள்ளன
தேடித் தேடி அவற்றைப் பறிப்போம்,
சில பாலைவங்களில் ஊஞ்கள் உள்ளன
நாடிச் சென்று அவற்றுள் அமருவோம்-

நதியின் நல்ல நடத்தை வெள்ளோட்டம்
நமக்காக துள்ளுது
நல்ல நடத்தையோடிருப்போம்,
நாம் நயமாக இருப்போம்-

பூமியின் நல்ல எண்ணங்கள் மரங்கள்
நமக்காக தோன்றின
நல்ல எண்ணங்களை ஏந்துவோம்,
நாம் பயண் படுவோம்-

கொடியின் நல்ல தீர்மானங்கள் பூக்கள்
நமக்காக பூத்தன
நல்ல தீர்மானங்களைச் செய்வோம்,
நாம் பலனிடுவோம்-

இன மத மொழி வெறிகளை முறிப்போம்,
இனிதாய் இருக்க ஆயத்தமாவோம்-

கிடக்கும் எல்லைகளை அடக்கம் செய்வோம்,
நாடுகள் அத்துனையும் இணைப்போம்-

சர்வதேசியத்தை வேண்டுவோம்,
சகல ஜன சௌபாக்கியத்தை கோருவோம்-

கல்வியில் தவருகள் கலந்து விட்டன
நாம் தடம் புரளாதிருப்போம்,
கலாச்சாரம் நடுங்குகிறது
நம்மை நாம் தவரவிடாதிருப்போம்-


சலிப்பை விரட்டுவோம்,
வெறுப்பை நிறுத்துவோம்-

சத்தம் போடுவதால் சுத்தம் ஆகாது
ஆக்கப் பூர்வமாக இருப்போம்,
சடாலம் உணவை அருந்தாது
ஆபத்துக்களை அப்புறபடுத்துவோம்-

இடி செய்தி தருகிறது... சேகரித்துக்கொள்வோம்,
மின்னல் தூது விடுக்கிறது…. கூட்டு சேர அழைப்போம்-

பிடஞ்சம் துன்புற்றதோ? இரவு மூண்டது
நாம் இரவே இல்லாமல் இருப்போம்,
அநீதி எனும் தூசி எங்கும் பரவி இருக்கிறது
நாம் அழுக்காகாமல் இருப்போம்-

சமுதாயமானது
வார்தைகள் சிதைந்த வாக்கியமானது
நாம் இழந்து விட்டதைப் படைத்து விடுவோம்,
என்றோ தொலைந்து போனதொன்று
இன்று முக்கியமாகி விட்டது
நாம் அவசியமானதை நிறுவி விடுவோம்-

தொடுக்கப் படாத கேள்விகளுக்கு
கொடுக்கப் பட்ட பதிலகள் கவிதைகள்
நாம் புவுமேல் கவிகளாய் புழங்குவோம்,
அர்த்தமுள்ள காரியங்கள்
வற்றிப்போகா ஊற்றுகள்
நாம் அர்த்தமுள்ள காரியங்களைச் செய்வோம்-

ரசனை ரகளைச் செய்கிறது
குணத்தில் மாசில்லாமல் செய்வோம்,
கூக்குரலில் நளினம் இருக்காது
யோசனையை மீட்டுவோம்-

காட்சிகளால் விழிகள் சுடுகின்றன
நகரீகத்தை பகுப்பாய்வோம்,
கவர்ச்சியால் வரட்சி நிலவுது
சூழ்ச்சிகளை நசுக்குவோம்,

வீழ்ச்சிக்குழியில் வீழ்ந்த போது
பக்குவத்தைத் தக்கவைத்துக்கொள்வோம்,
கவலை வலையில் சிக்கிக்கொண்ட போது
குறிக்கொள் எனும் வாளை உபயோகிப்போம்-

நம்மை நாம் சுத்தீகரித்துக்கொள்வோம்,
நமக்கு நாமே மெருகேற்றிக்கொள்வோம்-

மாற்றம் என்பது ஏற்படாமல் இருக்காது
மாற்றம் எனும் மாற்றத்தை மாற்ற முடியாது
மாற்றங்களை ஏற்றுக்கொள்வோம்,
மக்கிவிடாமல் இருப்போம்-

மதி என்னும் மேடையில்
நிதமும் கலை நிகழ்ச்சிகளை நிர்வகிப்போம்,
லாபங்களிலிம், நஷ்டங்களிலும்
நாம் கலைஞர்களாக நடை போடுவோம்-

கண்ட கனவுகள் ரொம்ப அதிகம்
கடமையைச் செய்து இயலாமையை துளைப்போம்,
வருந்தாமல் திருந்திவிட்டு
நனவுகளைப் பொருத்திக்கொண்டு திளைப்போம்-
இது போல் ஒருவர் இது வரை இல்லை என்று
இனி தோன்றுபவர்கள் பாட இயல்பூக்கத்தோடிருப்போம்,
இடுக்கண் வரும் வேளை இடைஞ்சல் வரும் வேளை
இருமடங்கு சுடர்ந்து இலக்கியமாவோம்-

தொடருவோம் மேம்பட,
உயருவோம் திகழ் உற-

வாருங்கள்… வாருங்கள்…

உதயங்களைப் புரிந்து கொள்வொம்!
புத்தம் புதிய மனிதர்களாவோம்!!

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (3-May-18, 4:20 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 175

மேலே