மகள்களை பெற்ற அப்பாக்கள்
"இரண்டு பெண் பிள்ளைகளா
எப்படி சமாளிக்க போற?"
மகிழ்ச்சியாக இருந்தவனை
அழ வைத்தனர்
நண்பர்கள்,
முப்பது வருடங்கள் கழிந்தன,
முதியோர் இல்லத்தில் இருந்த
நண்பர்களை காண சென்றேன்
"இரண்டு ஆண் பிள்ளைகளா
ஐயா பாவம்!"
என்று கூறி
மகிழ்ச்சி அடைந்தேன்
என் செல்ல பெண் பிள்ளைகளால்!