நா கோபால் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நா கோபால்
இடம்:  சேலம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-May-2018
பார்த்தவர்கள்:  228
புள்ளி:  69

என்னைப் பற்றி...

சொர்க்கம் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை.வாழும்போதே பூமியை சொர்க்கமாய் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

என் படைப்புகள்
நா கோபால் செய்திகள்
நா கோபால் - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2018 12:26 pm

வானவில்லும்
தோன்றி மறைந்தது...
பார்த்து ரசித்த கண்களும் நகர்ந்துவிட்டது ...

மேகக் கூட்டங்களும்
கலைந்துவிட்டது ....
மின்னலும் ஒளிர மறுத்துவிட்டது...
இடியும் தன்ஓசையை குறைத்துவிட்டது...

கொட்டும் மழையும் ஓய்ந்துவிட்டது ....
மண்ணில் விழுந்த துளியும்
பூமாதேவியை குளிரவைக்க
தன்னை மாய்த்து அர்பணித்துக்கொண்டது ....

அங்கும் இங்கும்
கூரையிலும் ஓட்டிலும்
விழுந்த துளிகள் எல்லாம்
சொட்டுச் சொட்டாய் ஏதோ ராகம் போடுகிறது ....

இலையிலும் மரக்கிளையிலும்
விழுந்த துளிகள் சில
அவ்வப்போது வேருக்கு நீர் பருக தருகிறது ....

சில துளிகள் மட்டும்
இலையின் இளமையை ரசிக்கிறது ,
பசு

மேலும்

வாவு 01-Nov-2018 3:43 pm
வழக்கம் போலதான்.. கலக்கிட்ட டா 😘 செம்ம 😍 28-Oct-2018 11:37 pm
நா கோபால் - நா கோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2018 12:08 am

ஒரு இரவு நேரம்

மழை பெய்து கொண்டிருந்தது


ஜில்லென்று வீசும் காற்று

கதகதப்பாக நீ

உன் அருகில் நான்

என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!


நெற்றியில் முத்தமிட்டேன்

கண்ணத்தில் முத்தமிட்டேன்

"ஏய்...நீ ரொம்ப அழகா இருக்க...

எதாவது பேசு..." என்று

கொஞ்சத் தொடங்கினேன்


அடுத்ததாக

ஒரு முத்தம் தர முயற்சி செய்த போது

என் வாயை மூடினாள்


கண்ணத்தில் ஒரு அரை விழுந்தது

தூக்கம் கலைந்தது

அருகில் படுத்திருந்தது என் நண்பன்

"கனவா..."

மேலும்

இது வெறும் கற்பனை தான் @சேநா 31-Aug-2018 11:15 pm
நல்லவேளை முத்தம் மட்டும் கொடுத்தீர்கள் ...... 31-Aug-2018 5:13 pm
நா கோபால் - நா கோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2018 12:19 am

விண்வெளியில் இருந்து

நிலவைப் பறித்து வந்து

உன் கையில் கொடுப்பேன்


ஸ்டிக்கர் பொட்டு எதற்கு?

தினமும் ஒரு நட்சத்திரத்தை

வாங்கித் தருகிறேன்

அதை நெற்றியில் வைத்துக்கொள்


தாஜ்மஹால் போல்

ஒரு குட்டி தாஜ்மஹால்

நீ இறந்த பின்

கட்டி வைப்பேன்


உனக்காக

என் உயிரையே தருவேன்


இப்படியெல்லாம் பொய் சொல்லி

உன்னை ஏமாற்றமாட்டேன்

காதலிக்கிறேன்

அவ்வளவு தான்!

மேலும்

நன்றி @செநா 31-Aug-2018 11:12 pm
ம்ம்..... அருமை நட்பே.... 31-Aug-2018 5:11 pm
நா கோபால் - எண்ணம் (public)
14-Aug-2018 1:38 pm

ஒரு இரவு நேரம்
மழை பெய்து கொண்டிருந்தது
ஜில்லென்று வீசும் காற்று
கதகதப்பாக நீ
உன் அருகில் நான்
என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!
நெற்றியில் முத்தமிட்டேன்
கண்ணத்தில் முத்தமிட்டேன்
"ஏய்...நீ ரொம்ப அழகா இருக்க...😍
எதாவது பேசு..." என்றேன்
"மாட்டேன்..." என்றாள்
அடுத்ததாக
ஒரு முத்தம் தர முயற்சி செய்த போது
என் வாயை மூடினாள்
கண்ணத்தில் ஒரு அரை விழுந்தது
தூக்கம் கலைந்தது
அருகில் படுத்திருந்தது என் நண்பன்
ஓ...கனவா...!  

மேலும்

நா கோபால் - நா கோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2018 6:34 pm

"இரண்டு பெண் பிள்ளைகளா

எப்படி சமாளிக்க போற?"

மகிழ்ச்சியாக இருந்தவனை

அழ வைத்தனர்

நண்பர்கள்,

முப்பது வருடங்கள் கழிந்தன,

முதியோர் இல்லத்தில் இருந்த

நண்பர்களை காண சென்றேன்

"இரண்டு ஆண் பிள்ளைகளா

ஐயா பாவம்!"

என்று கூறி

மகிழ்ச்சி அடைந்தேன்

என் செல்ல பெண் பிள்ளைகளால்!

மேலும்

சரிங்க ஐயா 04-May-2018 1:58 pm
முதியோர் இல்லத்திலிருந்த நண்பர்களின் மருமகள் யார்? உங்கள் மகள்களாகத்தான் இருக்க வேண்டும். 'மருமகள் என்றும் மாறுவதில்லை' அவள் உன் மகளாக இருந்தாலும்! 04-May-2018 8:27 am
நிலா அளித்த கேள்வியில் (public) thoufik rahman மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2018 2:49 pm

நம் மொழியினை தேசிய மொழியாக ஏன் அறிவிக்கப்படவில்லை?
ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா இல்லை அரசியல் விளையாட்டா?
நான் கேட்டதில் தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும் தோழர்களே .......

மேலும்

இதற்காக காகிதே மில்லத் பேன்ற தலைவர் போராடினார்கள், இந்தி தேசிய மொழியா, பழமையான தமிழ் மொழியா என விவதமும் வந்தது, ஆனால் தமிழ் நம் மாநிலத்தில் மட்டுமே பேசுவதாலும் இந்தி சார்ந்த மொழிகள் நாட்டில் பேசுவதாலும், இந்தியை அலுவல் மொழியாக அறிவித்தனர். இந்தியவிற்க்கு தேசிய மொழியென்பது கிடையாது. அலுவல் மொழி மட்டுமே உள்ளது.. இது என் புரிதல். 04-May-2018 5:11 pm
நமக்கு எப்படி தமிழ் சிறந்ததோ அதைப் போல தான் வட மாநில மக்களுக்கு இந்தி . அவர் தாய் மொழியை ஆட்சி மொழியாக அமைப்பதில் பெருமிதம் அடைகின்றனர். 04-May-2018 1:19 am
தமிழ் நாட்டுல முதல்ல தமிழ் ஆட்சி மொழியாவே அறிவிக்கப்படல அப்பறம் எப்படி தேசிய மொழியா அறிவிப்பாங்க தோழி 27-Apr-2018 1:30 pm
நன்றி சகோதரரே 23-Apr-2018 12:07 pm
நா கோபால் - Gopalakrishnan Vanitha R அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2018 11:12 am

சில நேரங்கள்
எத்தனையோ கண்கள் என்னை தீண்டியும் என்கண்கள் தேடுவது உன்னைத்தான் 
விலகி போகாதே தொலைந்துபோவேனடா..

மேலும்

கண்கள் எத்தனை என்னைத் தீண்டியும் என் கணைகள் தேடுவது உன்னைத் தானடா விலகிச் செல்லாதே தொலைச்சிடுவேன் தொலைச்சு !!! ------இப்படிச் சொன்னால்தான் அண்ணாச்சி விலகிப்போகாமல் வழிக்கு வருவாக ! 05-May-2018 10:05 pm
நன்று தோழி வாழ்த்துகள் 04-May-2018 5:05 pm
நன்றி அக்கா 04-May-2018 12:29 am
மிக சிறப்பு தோழி 03-May-2018 11:07 am
நா கோபால் - எண்ணம் (public)
04-May-2018 12:00 am

இந்த வாழ்க்கை ஒரு முறை தான்

நினைத்தவாறு ஏன் வாழ முடியவில்லை
விரும்பிய நபர்கள் ஏன் நம்மை வெறுக்கின்றனர்
நாம் புழுவின் உணவென்று மறந்துவிட்டோமோ?

மேலும்

நா கோபால் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2018 4:41 pm

எனது பால்யகாலத்தில் எனக்கு பல தாத்தாமார் இருந்தனர். அப்பாவின் வழியில் எவரும் இலங்கையில் இல்லை. அவர்கள் அனைவரும் தமிழகத்தில். அம்மாவின் வழியில் பலர் இருந்தனர். அம்மாவின் அப்பா பொலிஸ் தாத்தா 1956 இல் மறைந்த பின்னர் குருநாகலிலிருந்து குப்பமுத்து செட்டியார் என்ற பெயரில் ஒரு தாத்தா வந்து எங்களுடன் தங்கியிருந்தார்.

எமது தாய்மாமனாரின் மனைவியான அத்தையின் வழியில் அவரது அப்பா வேலு செட்டியார் என்ற தாத்தாவும் மாத்தளையிலிருந்து வந்து அத்தையுடன் இருந்தார். இரண்டு செட்டிமாரும் அடிக்கடி சந்தித்து சுகநலம் விசாரித்துக்கொள்வார்கள். அப்போது அவர்கள் தத்தம் விரல்களை மடக்கி சொடக்கு போட்டுக்கொண்டே பேசுவார்கள

மேலும்

அருமையான பதிவு; எனக்குள்ளும் பல நினைவுகளை புரட்டி போட்ட பதிவு. நல்லாருக்கு. 03-May-2018 4:40 pm
நா கோபால் - Preetha sudha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2018 6:36 pm

இதுவா என் பூமி?...
      எங்கே எனது வளங்களை காமி...?
       எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் ........
       எங்கே போனது சாலையோர மரங்கள்....?
        மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் வீடுகள்.....
         என்ன ஆனது பச்சைப் பசுங்காடுகள் ...?
காகித கோப்பைகளில் தேநீர்......
பின்பு எப்படி கிடைக்கும் உமக்கு தண்ணீர்........
சூரிய வெப்பம் உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது..
பற்பல நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் உம்மை அடிமையாக்கிக் கொன்று கொண்டிருக்கிறது .....
பணம் தான் மாறி கொண்டே இருக்கிறது....
ஆனால் மனித மனமோ கொஞ்சம் கூட மாறவில

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே