ஒரு மகிழ்ச்சியான தருணம்!

ஒரு இரவு நேரம்

மழை பெய்து கொண்டிருந்தது


ஜில்லென்று வீசும் காற்று

கதகதப்பாக நீ

உன் அருகில் நான்

என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!


நெற்றியில் முத்தமிட்டேன்

கண்ணத்தில் முத்தமிட்டேன்

"ஏய்...நீ ரொம்ப அழகா இருக்க...

எதாவது பேசு..." என்று

கொஞ்சத் தொடங்கினேன்


அடுத்ததாக

ஒரு முத்தம் தர முயற்சி செய்த போது

என் வாயை மூடினாள்


கண்ணத்தில் ஒரு அரை விழுந்தது

தூக்கம் கலைந்தது

அருகில் படுத்திருந்தது என் நண்பன்

"கனவா..."

எழுதியவர் : நா.கோபால் (31-Aug-18, 12:08 am)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 70

மேலே