கார்ப்பரேட்டுகள் பேசுகிறோம்

#கார்ப்பரேட்டுகள் பேசுகிறோம்

கோடிகள் பார்த்த கேடிகள்
நாங்கள்..!

இலாபக் கணக்கில்
கண்ணும் கருத்துமாய்
எப்போதுமே புத்திசாலிகள்
நாங்கள்..!

கொரோனா எங்களை
என்ன செய்துவிட இயலும்..?
என்கிற எகத்தாளம் தான்
இன்னமும்..!

கிரிக்கெட்டைக் காண
அரங்கில்
ஆட்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் தான் என்ன..?

ஆட வைப்போம்…
ஊடகங்கள் பல விருக்க
கவலைகள் எவையுமில்லை எங்களுக்கு…
விளம்பரங்களில்
உலுக்குவோம்..!

டி க்கெட் வாங்காமல்
கிரிக்கெட் பாருங்கள்..
கேள்விகள் கேட்டும்
போட்டிக்கு அழை த் தும்
உலுக்கு வோம்
கட்டணத்திற்கும் மேலாய்..

எங்களின்
பணம் காய்ச்சி மரங்களே
நீங்கள் தானே..

எங்கள் வங்கிக் கணக்கில்
வரவினை ஏற்ற
உங்கள் வங்கிக் கணக்கில்
பற்றினை ஏற்றுவோம்..

நாங்கள் நடத்தும்
கண்ணா மூச்சி
ஆட்டத்தில் எல்லாம்
சறுக்கி விழும் மடையர்கள்
சாமானியர்கள் அன்றி
வேறு யார் இருக்கிறார்கள்..?

உங்களின் சறுக்களில்தான்
எங்களின் ஏற்றங்கள்
என்றால் நம்பவா
போகிறீர்கள்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (19-Sep-25, 7:32 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 27

மேலே