உனக்கென்ன வேணும் சொல்லு

விண்வெளியில் இருந்து

நிலவைப் பறித்து வந்து

உன் கையில் கொடுப்பேன்


ஸ்டிக்கர் பொட்டு எதற்கு?

தினமும் ஒரு நட்சத்திரத்தை

வாங்கித் தருகிறேன்

அதை நெற்றியில் வைத்துக்கொள்


தாஜ்மஹால் போல்

ஒரு குட்டி தாஜ்மஹால்

நீ இறந்த பின்

கட்டி வைப்பேன்


உனக்காக

என் உயிரையே தருவேன்


இப்படியெல்லாம் பொய் சொல்லி

உன்னை ஏமாற்றமாட்டேன்

காதலிக்கிறேன்

அவ்வளவு தான்!

எழுதியவர் : நா.கோபால் (31-Aug-18, 12:19 am)
Tanglish : unakena venum sollu
பார்வை : 86

மேலே