இப்படிக்கு இயற்கை
இதுவா என் பூமி?...
எங்கே எனது வளங்களை காமி...?
எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் ........
எங்கே போனது சாலையோர மரங்கள்....?
மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் வீடுகள்.....
என்ன ஆனது பச்சைப் பசுங்காடுகள் ...?
காகித கோப்பைகளில் தேநீர்......
பின்பு எப்படி கிடைக்கும் உமக்கு தண்ணீர்........
சூரிய வெப்பம் உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது..
பற்பல நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் உம்மை அடிமையாக்கிக் கொன்று கொண்டிருக்கிறது .....
பணம் தான் மாறி கொண்டே இருக்கிறது....
ஆனால் மனித மனமோ கொஞ்சம் கூட மாறவில்லை....
அவனது பேராசைகளும் ஓயவில்லை.......
என் வளங்களை அழிக்கின்ற ஆடம்பரம் ஒரு போதும் தேவையில்லை......
எனது கோபத்திற்கு ஆளானால்..... இவ்வுலகில் ஓர் உயிரும் நிலை இல்லை.....
ஆகவே ..காத்திடு நான் படைத்த வளங்களை... நட்டிடு மரங்களை... சேமித்திடு தண்ணீரை...
இல்லையெனில் ,இன்றைய நாடு ..நாளைய சுடுகாடாய் மாறிவிடும்... இன்றைய கலாச்சார பூமி... நாளைய கலவர பூமியாய் மாறிவிடும் என்பதை என்றும் மறவாதே மனித இனமே.....
- இப்படிக்கு, நீங்கள் கொன்று கொண்டிருக்கும் இயற்கை.........