காதலித்தேன்

மொட்டுச் சிரிக்கும் அழகை
காதலித்தேன்.......
மொட்டுடவிழும் அழகை
காதலித்தேன்......
பறவைகளின் ரீங்காரத்தை
காதலித்தேன்......
பச்சை கம்பிளி போர்த்திய
வனத்தை காதலித்தேன்..........
காலை கதிரவனை
காதலித்தேன்........
குளிர் நிலவைக்
காதலித்தேன்.......
காதலித்தேன் காதலித்தேன்
இயற்கையின் இரம்யத்தை
காதலித்தேன்........

எழுதியவர் : ஆர். கோகிலா (2-May-18, 7:04 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : kadhalithen
பார்வை : 66

மேலே