இலையில் படிந்த மழைத்துளிகள்

வானவில்லும்
தோன்றி மறைந்தது...
பார்த்து ரசித்த கண்களும் நகர்ந்துவிட்டது ...

மேகக் கூட்டங்களும்
கலைந்துவிட்டது ....
மின்னலும் ஒளிர மறுத்துவிட்டது...
இடியும் தன்ஓசையை குறைத்துவிட்டது...

கொட்டும் மழையும் ஓய்ந்துவிட்டது ....
மண்ணில் விழுந்த துளியும்
பூமாதேவியை குளிரவைக்க
தன்னை மாய்த்து அர்பணித்துக்கொண்டது ....

அங்கும் இங்கும்
கூரையிலும் ஓட்டிலும்
விழுந்த துளிகள் எல்லாம்
சொட்டுச் சொட்டாய் ஏதோ ராகம் போடுகிறது ....

இலையிலும் மரக்கிளையிலும்
விழுந்த துளிகள் சில
அவ்வப்போது வேருக்கு நீர் பருக தருகிறது ....

சில துளிகள் மட்டும்
இலையின் இளமையை ரசிக்கிறது ,
பசுமையை விரும்புகிறது ...

விட்டுச் செல்ல மனமின்றி
அழகிய பனி துளியாய் ,
பல முழுநிலவுகள் ஒன்றாய் இருப்பது போல் காட்சியளிக்கிறது ....
வாட விடாமல் காத்துக்கொண்டு இருக்கிறது ....

யாரும் ரசித்திடாத
கண்களுக்கு தென்படாத ,
ஓர் அழகு
பேரழகு இலையில் படிந்த
மழைத்துளிகள் ....

எழுதியவர் : deepikasukkiriappan (28-Oct-18, 12:26 pm)
பார்வை : 449

மேலே