Gopalakrishnan Vanitha R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Gopalakrishnan Vanitha R |
இடம் | : ராஜபாளையம் |
பிறந்த தேதி | : 21-Mar-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 6 |
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை கடவுளே கிடைத்தார் வரமாக -என் அப்பா
ரோமர் வதைத்த ஈட்டியில்
குருதி பாய்ந்தது கொலீசியத்தில் !
ராமர் வதைத்த பாணத்தில்
ராவணன் தலை பத்து உருண்டது !
பீமர் அடித்த கதையில்
துரியோதனன் கதை முடிந்தது !
பீஷ்மர் அடிக்க பாணம் எடுக்க
சிகண்டி எதிர்வர பாரதப் போர் திசை திரும்பியது !
ஹோமர் எடுத்த அடியில்
இலியட் ஒடிசி காவியம் பிறந்தது !
காமர் அடித்த மலர் பாணத்தில்
காதலில் உலகம் திளைக்குது !
காத்திருக்கிறேன்
புகைப்பிடிப்பவன்
மது அருந்துபவன்
விபச்சாரி
திருடன்
கொலையாளி
பிச்சைக்காரன்
என்று நீ வெறுக்கும்
மனிதனுள் மறைந்துள்ளது
ஒரு முன்கதை
ப்ரிய தோழிக்கு ஒன்று.
பாறைச் சூட்டில்
விழுந்த நீர்துளிகளாய்
நம் தத்துவங்கள்.
திரைப்படம் தவிர
மற்றனைத்தும் எதிர் நீ...
பொருந்திய மரையில்
பொருந்தா வளையமாய்
கருதுகோளில் நழுவி
எதிரெதிர் பாதையில்
விலகும் நம் நெஞ்சில்
நட்போ நிலமென நீளும்.
சாய்ந்துகொண்ட தோள்...
எத்தனைமுறை என்
கண்ணீர் துடைத்தவள் நீ
நாம் வேறுதான்...
தமிழ் நான், நீ மராட்டியம்
பேசவோ ஆங்கிலம்.
பார்ப்போமா தெரியாது.
உணர்கிறேன் நான்...
நள்ளிரவு நேரத்தில்
அர்த்தமற்ற புன்னகையில்
நீ தொழுத இறைவனை
சிந்தும் நொடியளவு
கனவில் காண்கையில்...
எங்கும் வெளியேறாத
உன் கண்ணீரை
கொட்டியதெல்லாம்
என்னிடம் மட்டுமே
கொட்டு...
ரோஜாக்கள
போதும் வேண்டாம் என ஒரு கூட்டம்...🤗
மீதமானதாவது வேண்டும் என மறு கூட்டம்...😔
இருபுறமும் திண்டாட்டம்...😫
முழுவதுமான போராட்டம்...🤕#வாழ்க்கை
காதலென்றால் என்னவென்றே
அறியாத வயதில்
அவன் கண்ணை பார்த்ததால்
எனக்குள் என்னமோ பரவசம்!!!
எனவே என் இதயம் இருந்தது
அவன் வசம்!!!
கண்கள் அழகாக
கனவுகள் வழிந்தது!!! கண்களின்ஊடே எண்ணற்ற
கற்பனைகளும் வளர்ந்தது!!!
அவனை நினைத்தே என் நெஞ்சு இருக்கும் இடம் அறிந்து கொண்டேன்!!!
அவனை இரசித்தே
ஆண்மையின் இரகசியங்கள் தெரிந்து கொண்டேன்!!!
அவனை காதலித்தே
காதலின் ஆழம் உணர்ந்து கொண்டேன்!!!
காலம் கடகட வென நடை போட்டதில் கண் பார்வையோடே கரைந்து போனது!!! என்
முதல் காதல்!!!
உலகே அழிந்தாலும்
அழியுமோ முதல் காதல்!!!....
நீ எங்கே இருக்கிறாயோ நான் அறியேனடா....
ஆனால் இன்றும் உன்னை காதலிக்கிறேனடா!!!...என் முதல் காதலா