நட்பெனும் தீவினிலே

ப்ரிய தோழிக்கு ஒன்று.
பாறைச் சூட்டில்
விழுந்த நீர்துளிகளாய்
நம் தத்துவங்கள்.
திரைப்படம் தவிர
மற்றனைத்தும் எதிர் நீ...
பொருந்திய மரையில்
பொருந்தா வளையமாய்
கருதுகோளில் நழுவி
எதிரெதிர் பாதையில்
விலகும் நம் நெஞ்சில்
நட்போ நிலமென நீளும்.
சாய்ந்துகொண்ட தோள்...
எத்தனைமுறை என்
கண்ணீர் துடைத்தவள் நீ
நாம் வேறுதான்...
தமிழ் நான், நீ மராட்டியம்
பேசவோ ஆங்கிலம்.
பார்ப்போமா தெரியாது.
உணர்கிறேன் நான்...
நள்ளிரவு நேரத்தில்
அர்த்தமற்ற புன்னகையில்
நீ தொழுத இறைவனை
சிந்தும் நொடியளவு
கனவில் காண்கையில்...
எங்கும் வெளியேறாத
உன் கண்ணீரை
கொட்டியதெல்லாம்
என்னிடம் மட்டுமே
கொட்டு...
ரோஜாக்கள்
பூத்துக் குலுங்குகின்றன.
உன் பிரார்த்தனைக்கு.

எழுதியவர் : ஸ்பரிசன் (30-Apr-18, 8:33 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 600

மேலே