வினோ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வினோ |
இடம் | : துபாய் |
பிறந்த தேதி | : 17-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 30 |
கவிதை எழுத்து மற்றும் கவிதை படிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் ஒரு சின்ன கவி நான் வரையும் கவிதைகளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் ....
கடலுக்கும் அவள் மேல் காதலோ ?
என்னவள் நடக்கையில் பதிந்த
கால்தடம் அழியாது காக்க..
கடல் அலைகூட.
கரை வர மறுக்கிறதே !!
என்னவள் கூந்தல்
துவட்டையில்
சிதறும் துளிகளில்
நனைகிறது
என் இதயம்!!
அழகே..🧚♀️ 🤳
இனி ஒரு ஜென்மம் உன் கையின்
கைபேசியாய் நன் வர வரம் வேண்டும்..
தினம் தூரத்தில் நான்
கண்டு வியந்த அழகை...
உன் கையில் இருந்து
ஒரு ஜென்மம் நான் ரசிக்க வேண்டும் ..😍
தூரத்தில் அவள் முகம் காண
இதயத்தில் சிறு படபடப்பு..!
கூட்ட நெரிசலில் தேடாமல் தென்படும்
அவள் முகம் ..!
எதையும் எளிதாக மறந்து போகும்
என்னுள் பதிகிறது - தினம்
அவள் சூடிய பூக்களின் வண்ணம் ...!!
ஆலய வாசலில் அவள் விட்டு சென்ற
செருப்புடன் பேசி பழகுது
என் கால்கள் ..!!
அவள் இல்லை என தெரிந்தும்
அவள் வீட்டு தெருவில் சுற்றுகிறது
என் மோட்டார் சைக்கிள்...!!
கனவுகளை சுமந்து
கடல் மேல் பறந்து
பாலைவனம் அடைந்தோன்
உறவுகளை இழந்து
உணர்வுகளை சிதைத்து
தினம் தினம் தவித்தோன்
என்னை தாலாட்டி வளர்த்த தாயும் அங்கே
அவள் அன்புக்கு எங்கும் சிறு இதயமும் இங்கே
உறவுகளின் நினைவுகள் கண்ணில் நீராய்
உழைப்பின் கஷ்டம் வேர்வை துளியாய்
தனிமையில் வாடும் என் நெஞ்சின் ஓரம்
நண்பர்கள் குரல் வந்து மோதும் நேரம்
என் நெஞ்சம் உடைந்து போகுதடா நண்பா
நம் நட்பின் அர்த்தம் இன்று உணர்ந்தேனடா
தாய் நாட்டின் உரிமம்,தெரிந்ததும் இங்கு
தாய் மொழியின் பற்று புரிந்ததும் இங்கு
உழைப்பால் உயர்வேன் அயல் நாட்டில்
என் கனவுகள் நிஜம
புவியியல் மாற்றத்தால்
பூமியில் விழுந்த நிலா ஒன்று
கைபேசியில் சுயபடம் எடுத்து
விழுந்த சேதம் காணும் அழகு !!
பல கவிதை எழுதிய
என் இதயத்தில் பதிந்த
முதல் கவிதை"
நேற்று காகிதத்தில் நான்
கிறுக்கிய உனது பெயர் ..!!
அழகு' இதழ் விரித்து நீ சிரிக்க
வெட்க்கத்தில் பூக்கள் !!
தன்னைவிட அழகொன்று பூமியில் பிறந்ததை எண்ணி
கோபத்தில் நிலா !!
மலர் ஏந்திய கைகளில் தேவதைக்கு வாழ்த்து சொல்ல வழியோரம் நானும் ..!!
பூமியில் பிறந்த இந்த அழகு நிலவுக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....